Header Ads



ஒபாமாவின் காரும் பழுதடையும்..!



அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றபின் முதன் முறையாக அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது நடந்த ஒரு ருசிகரத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் எனப்படும் அமெரிக்காவின் முதல் குடிமகனான ஒபாமா பாரம்பரியம் மிக்க லிமோசன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தக் கார் திடீரென பழுதடைந்து நின்றது. இதனால் பதட்டம் அடைந்த அதிகாரிகள் என்னவென்று ஆராய்ந்தபோது டீசலில் இயங்கக்கூடிய அந்தக் காரில் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

காரிலிருந்து இறங்கிய ஒபாமா மாற்றுக் காரில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தார். அவர் பயணம் செய்த கார் பழுதுபார்ப்பதற்காக இழுத்துச் செல்லப்பட்டது அதிபரின் பாதுகாப்பிற்காக வந்த காரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனால்தான் எப்போதும் மாற்று கார்களையும், மெக்கானிக்குகளையும் உடன் அழைத்து வருவதாகவும் பாதுகாப்புப் பணியில் இருந்த எட்வின் டோனோவன் தெரிவித்தார். இத்தகவலை டெய்லி மிர்ரர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.