ஈராக் - சிரியா எல்லையில் பரிதாபம்...!
ஈராக் நாட்டின் மேற்கு மாகாணமான அன்பரில் வசிக்கும் ஆயிரக் கணக்கான மக்கள், ஆளும் ஷியா அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக்கிற்குள் கடந்த வாரம் நுழைந்த சிரியா நாட்டை சேர்ந்த 65 ராணுவ வீரர்கள் மற்றும் அலுவலர்களை அழைத்துக்கொண்டு சிரியா அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக ஈராக் அதிகாரிகள் நேற்று ஒரு வாகனத்தில் ஈராக் - சிரியா எல்லைப் பகுதியான அல்-வாலித் நோக்கி சென்றனர்.
அகாஷத் என்ற இடத்தில் அந்த வாகனத்தை இடைமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சிரியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
Post a Comment