Header Ads



நாட்டில் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது - என்.எம்.அமீன்


(இக்பால் அலி)

இந்நாட்டின் பிரதான மொழி சிங்களம். நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கும் தப்பபிப்ராயங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இந்த நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களுக்கு எங்களைப் பற்றி எங்களுடைய சமயத்தைப் பற்றி எங்களுடைய கலாசார பழக்க வழக்கங்களைப் பற்றி எங்கள் உணவு பழக்க வழக்கங்களைப் பற்றி நாங்கள் சரியாகச் சொல்லத் தவறியதன் காரணமாக இவை எல்லாவற்றையும் தவறுதலாகப் பார்க்கின்ற ஒரு பரிதாபகரமான சூழ்நிலைக்கு இந்நாட்டினுடைய  முஸ்லிம்கள் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். இதனால் முஸ்லிம்களுடைய இருப்பே கேள்விக்குறியாக இருக்கின்ற காலகட்டத்திலே நாங்கள் சிங்கள மொழியில் முஸ்லிம் ஊடகவியாளர்களை உருவாக்குதல் என்ற நல்ல முயற்சி ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றோம் என்பதில் நாங்கள் சந்தோசப்படுகின்றோம் என்று முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தெரிவித்தார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சிங்கள மொழியில் கல்வி பயிலுகின்ற முஸ்லிம் மாணவர் மாணவியர்களுக்கான  சிங்கள மொழிப் பத்திரிகை தொடர்பான  பயிற்சிச் செயலமர்வு இன்று குருநாகலையில் 17-03-2012; நடைபெற்றது. அந்த நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம். என். அமீன்  இவ்வாறு இதனை அங்கு தெரிவித்தார்.

இவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

எமது அமைப்பு நீண்ட காலமாக இதுவரைக்கும் ஊடகத்துறையில் பயிற்சிகளை தமிழ் மொழியிலேயே வழங்கி வந்துள்ளது. முதற் தடவையாக சிங்கள மொழியில் சுமார் 55 இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள மொழியில் ஊடகத்திற்குப் பிரவேசிப்பதற்கான ஆரம்ப பயிற்சி குருநாகல் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் எங்களுடைய முஸ்லிம் பிள்ளைகள் 40 விகிதத்தற்கும் மேற்பட்டவர்கள் சிங்கள மொழியிலே கல்வி கற்கின்றார்கள். இன்னும் சிங்களப் பாடசாலைகளிலே இடமளித்திருந்தால் இந்த எண்ணிக்கை கூடுதலாக இருந்திருக்கும் என்றாலும் கூட எங்களைச் சூழ வாழ்கின்ற பெரும்பான்மையின சகோதரர்களுக்கு சமய பழக்க வழக்கங்களை, எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் சொல்ல வேண்டும்.

அதேவேளை இந்த நாடு பற்றிய நல்ல விடயங்களை நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். இது எங்களுடைய தாய் நாடு. நாங்கள்  வேறு எங்கும் போக முடியாது. நாங்கள் வாழ்வதும் இறப்பதும் மறப்பதும் எல்லாம் இங்கேதான். அந்த வகையிலே எங்களுடைய இளைஞர்களை நாங்கள் தயார்படுத்த வேண்டி இருக்கிறது. வரலாற்றுப் புகழ்மிக்க இந்த உயரிய பணியை இந்தப் பிரச்சினை அதிகம் காணப்படுகின்ற குருநாகல் மாட்டத்தை தெரிவு செய்து நாங்கள் நடத்துகின்றோம். இது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துவதுற்கு நாங்கள்
முயற்சிகள் செய்யவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.