ஓட்டமாவடியில் நவீன வசதிகள் கொண்ட பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி
(அனா)
ஓட்டமாவடியில் நவீன வசதிகள் கொண்ட பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றை இவ் வருடத்திற்குள் அமைக்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு (22.03.2013) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன ஓட்டமாவடி பொதுச் சந்தைக்கு விஜயம் செய்து மீன் வியாபாரிகளின் நடவடிக்கைகளை கண்காணித்ததோடு நவீன வசதிகளுடனான பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி ஒன்றை இவ் வருடமே அமைத்துத் தருவதாக மீனவ வியாபாரிகளிடம் உறுதியளித்தார்.
(22.03.2013) ஓட்டமாவடி அல் மதீனா கிராமிய மீனவர் அமைப்பின் அழைப்பின் பேரில் மீன் சந்கை;கு வருகை தந்த கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் மீன் வியாபாரிகள் தாங்கள் தற்காலிக கட்டிடத்தில் தற்போது வியாபாரத்தை செய்து வருவதாகவும் தண்ணீர் வசதி இல்லாமல் கஸ்டப்படுவதாகவும் இவ் இரண்டு பிரச்சினைக்கும் தீர்வினைப் பெற்றுத் தருமாறு வேண்டிக் கொண்டனர்.
இவ் வருடத்திற்கான திணைக்கள அபிவிருத்தித் திட்டத்தில் நவீன வசதிகளுடனான சந்தைக்கட்டிடத் தொகுதி அமைத்தத் தருவதுடன் இவ் இடத்தில் நிறந்தரமாக தண்ணீர் கிடைப்பதற்கான வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.
அமைச்சருடன் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிமால் கெட்டியாராச்சி, கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய குணவர்த்தன, கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள தொழில் துறைப் பணிப்பாளர் நந்தசேன, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ், வாழைச்சேனை கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சம்மேளத் தலைவர் ஏ.சி.எம்.முனவ்வர்; ஆகியோர்; கலந்து கொண்டனர்.
Post a Comment