Header Ads



அத்தனையும் ஆகும் அவர்களுக்கு ! ஆனால்...?


காத்தான்குடி -மதியன்பன் -

ஆற்றுப் படுத்த முடியவில்லை
அழுது கொண்டிருக்கிறது
ஆத்மக்கள்..!

தோற்றுப் போய் விட்டோமா
என்றுகூட
எண்ணத் தோன்றுகிறது.

விட்டுக் கொடுப்பு
விளையாட்டில் இருக்கலாம்
ஆனால்
உயிரான மார்க்கத்தில்
ஒரு போதும் இருக்க முடியாது.

பொதுவாக
பலமே இல்லாத சேனையிடம்
நாம்
பலமிழந்து போனது ஏன்..?

படித்தவர்கள் தானே
முடிவெடுத்தார்கள்
பல நாட்கள் யோசித்த பின்னர்..
தலைவர்களின்
தடுமாற்றம் புரியவில்லை.

காலாவதியானது ஹலால்
காவியுடைக்குள்.
பர்தாக்கள் மட்டுமல்ல
இனி
பள்ளிவாயல்களும்
பறிபோய்விடலாம்.

ஒற்றுமைக்கும், அபிவிருத்திக்கும்
உடன் பட்டுப் போகலாம்
அதற்காக
அல்லாஹ்வின் சட்டங்களை
அந்நியர்களிடம் அடகு வைக்கலாமா..?;

இஸ்லாம் என்ன
இரண்டாவது இன்னிங்சா
இடைநிறுத்திக் கொள்வதற்கு..

பாவம்
அமைச்சர்களைத் திட்டாதீர்கள்..
அவர்களால்
ஒன்றுமே செய்ய முடியாது..
வாய்கள் பூட்டப்பட்டு
அலரி மாளிகைக்குள் 
திறப்புகள் தேங்கிக் கிடக்கிறது

அறைகுறை ஆடை
அனாச்சாரக் கலாச்சாரம்
விபச்சார விடுதி
வேண்டாத உறவும் கருக்கலைப்பும்
சாராயத் தவறனை
சத்தியம் மறந்த போதனை
அத்தனையும் ஆகும் அவர்களுக்கு..

ஆனால்
பள்ளிவாயல், மத்ரசா, பர்தா
இஸ்லாமிய வங்கி
இறைச்சி, ஹலால்
இவையெல்லாம் கூடாது.

கொஞ்சம் பொறுங்கள்..
தாடி, ஜூப்பா, தலைப்பா, 
சுன்னத் செய்தல், சலாம் சொல்லுதல்
இவையெல்லாம்
தவணை முறையில் தடையென வரும்.

அப்போதும்
நம் தலைவர்கள்
உடன்படிக்கை பற்றியும்
ஒற்றுமை பற்றியும்..?


4 comments:

  1. அஸ்ஸ‌லாமு அலைக்கும் ச‌கோத‌ர‌ர்
    காத்தான் குடி ம‌திய‌ன்ப‌ன் அவ‌ர்க‌ளே!கொஞ்ச‌ம் பொறுங்க‌ள்
    தாடி................ இவ்வாறு தொட‌ரும் உங்க‌ள் க‌விதையின் ஆழ‌ம் உங்க‌ளுக்கே புரிந்திருக்காது என‌ எண்ண‌த் தோன்றுகின்ற‌து.

    மேலும் என‌க்கொரு ச‌ந்தேக‌ம், நீங்க‌ளும் பொ.ப‌.சே யின் போட்டுக்கொடுக்கும் குழு உறுப்பின‌ரோ என்று.......?

    வேறு எதாவ‌து அவ‌ர்க‌ள் எம்மிட‌ம் காணாத‌ குறைக‌ள் இருந்தால், அவ‌ற்றையும் உங்க‌ள் அழ‌கான‌ க‌வியில் சேர்த்திருக்க‌லாமே???

    எழுதுகின்றோம் என்று ஏதோ உளறிக் கொட்டி விட்டுப் போகாம‌ல், கார‌ண‌ காரிய‌ம் அறிந்து செய‌ற்ப‌டுத‌லே கைங்க‌ரிய‌ம் என்ப‌தோடு.......

    த‌ய‌வு செய்து அவ‌ச‌ர‌மாக‌ அந்த‌ வ‌ரிக‌ளை நீக்கிவிட‌வும் அல்ல‌து க‌விதையைப் புதுப்பிக்க‌வும்.

    ReplyDelete
  2. நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள் மதியன்பன்...

    Mehdhi எப்படி இப்படியெல்லாம்...??? இல்லாட்டி அவங்களுக்கு இதெல்லாம் தெரியாதுல்ல... :p

    ReplyDelete
  3. சிறப்பான வரிகள் ............ சிவப்பான வரிகள் ............... அது சிலரை சிவக்க வைக்கிறதேனோ? அரசியல் ஒழுங்கைகளில் அலையும் சிலருக்கு அந்த வரிகள் கரிக்கின்றதாக்கும்........ அதற்காக நீ அர்த்தம் மாறிப்போக வேன்டாம். உன் கவிதையில் உன்மைதான் சுரக்கிறது.

    ReplyDelete
  4. சகோதரர் மெஹ்தி அவர்களே.
    உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஒன்றும் புரியாமல் நான் கவிதை எழுதவில்லை. நமது சமூகத்திற்கு எதுவுமே நடந்து விடக்கூடாது என்று இறைவனை வேண்டிக் கொண்டுதான் இந்தக் கவிதையை எழுதி முடித்தேன்.
    நாங்கள் எதையும் அவர்களுக்கு காட்டிக் கொடுக்கத் தேவையில்லை. அவர்கள் குர்ஆனை விரித்து வைத்துக் கொண்டு நமக்கு விளக்கம் சொல்லுகிறார்கள்.
    உங்கள் அப்பாவித்தனம் புரிகிறது. காட்டிக் கொடுப்பவன் நானா அல்லது உங்களைப்போன்ற கொமன்ஸ் போடுபவர்களா..?
    பொ.ப.சே னாவின் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், ஊடக அறிக்கைகள், மேடைப்பேச்சுகள். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இவை பற்றி எதுவுமே உங்களுக்குத் தெரியாதா.. தெரிந்திருந்தால் இப்படியான கொமன்ஸ்களை நீங்கள் போட்டிருக்க மாட்டீர்கள்.
    என்னுடைய ஏனைய சமூகக் கவிதைனளை இந்த இணைப்பிலும் பாருங்கள். www.mathyanpan.tk
    அன்புடன்
    மதியன்பன்

    ReplyDelete

Powered by Blogger.