Header Ads



அரசியல் யாப்பின்படி முஸ்லிம்களுக்குரிய உரிமையை தாருங்கள்...!


(ஆசிரியர் - ஏக்கூப் பைஸல்)

நாட்டின் தர்மபதத்தினை பிழையாக படித்தவர்கள்  மக்களை பிழையாக வழிநடாத்த முற்படுகின்றார்கள் இதற்கு பின்னால்  ஒரு அமைச்சரும் வழிகாட்டியாக இருக்கின்றார். இதன்போது  எங்கள் மத உரிமையை அரசியல் தலைவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நாங்கள்யார் என்று ஞாபகப்படுத்துவோம். 

அத்தியாயம் II  உறுப்புரை 09 

இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10 ஆம், ஆளொல்வெருவரும் தான் விரும்பும் 14 (1) (உ) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில்.பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் .

அத்தியாயம் III  உறுப்புரை 10 

ஆளொவ்வொருவரும், தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுவதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனசாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம்,மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும். 

அத்தியாயம் III  உறுப்புரை 12 ( 2 )

 இனம்,மதம்,மொழி,சாதி,பால் அரசியற்கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப் பிரசைக்கும் ஒரங்காட்டுதல் ஆகாது. 

அத்தியாயம் III உறுப்புரை 14 ( 1 ) உ

ஒவ்வொரு பிரசையும் பின்வருவனவற்றுக்கு உரித்தடையவராவர். 
தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும்,அனுசரிப்பிலும் சாதனையிலும்,போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம். 
மேற்குறிப்பிடப்பட்ட யாப்பின் அத்தியத்தியாயங்களின்   படி   பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது , பேணிவளர்பது அரசு எனவே பொது பல சேனா அமைப்பு அல்ல. பௌத்த சாசனத்தை பாதுகாப்பது என்று பொது பல சேனா சொல்லதன் மூலம்  யாப்புக்கும், அரசுக்கும் முரணாக செயற்பாடுகின்றது. எனவே நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறுவது குற்றமாகும் . அவ்வாறு மீறுகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசின் கடமையாகும் .ஆனால் நடப்பது என்ன சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு அரசாங்கம் நிர்வாக கட்டடம் காலியில் திறந்து கொடுக்கிறது.  

நாட்டின் அடிப்படை சட்டத்தின் அத்தியாயம் II  உறுப்புரை 09, அத்தியாயம் III உறுப்புரை 10, அத்தியாயம் III   உறுப்புரை 12 ( 2 ), அத்தியாயம் III   உறுப்புரை 14 ( 1 ) உ, ஆகியவற்றினை பொது பல சேனா மீறிச் செயற்படுகின்றது. இலங்கை அரசாங்கத்துடன் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள்  முஸ்லிம் மக்களுக்கு சேவைசெய்யாவிட்டாலும் பரவாயில்லை  யாப்பில் உள்ளவற்றையாது பெற்றுத் தாருங்கள்.   

4 comments:

  1. இந்த உபதேசம் எல்லாம் நமது அரசியல் தலைவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கே பௌதர்களில் சிலர் பேசுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது ஆயினும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள் அரசாங்கமும் ஊக்குவிக்கிறது நாம் அமைதி காப்போம் வெற்றி பெறுவோம்

    ReplyDelete
  2. Mr. Faizal why can not go to court according to the constitution?

    ReplyDelete
  3. இலங்கையில் மிக வேகமாக அழிந்து பொய் கொண்டு இருக்கும் புத்தரின் கொள்கையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கும் பொது பல சேனா புத்தரின் போதனையை முற்றிலும் மறந்து விட்டது என்பதே உண்மை

    ReplyDelete
  4. இந்த யாப்புரிமைகள் அசாத் சாலியை தவிர மற்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கு தெரியாதோ ........

    ReplyDelete

Powered by Blogger.