Header Ads



பங்களாதேஷில் வன்முறை தொடருகிறது (வீடியோ)



வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமிய கட்சியின் துணைத் தலைவரும், இஸ்லாமிய தீப்பொறி பேச்சாளருமான தல்வார் ஹூசைன் சயீதி (73) மீது, 1971-ம் ஆண்டு சுதந்திரபோராட்டத்தின் போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக வழக்குகள் தொடரப்பட்டது. இதில் நீதிமன்றம் சயீதி உள்பட மூவருக்கு மரண தண்டனை விதித்தது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேசம் முழுவதும் கடந்த 4 நாட்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஜமாத்-இ-இஸ்லாமி அங்கு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்நிலையில் வடமேற்கில் உள்ள போக்ரா போலீஸ் நிலையத்தில், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினர் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் இன்று தாக்குதல் நடத்தினர். உடனே சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ராணுவத்தினர், அப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன் சண்டையிட்டனர். இதில் ஒரு போலீசார் உள்பட 19 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி முதல், நடைபெற்றுவரும் இந்த மோதல்களுக்கு இதுவரை வங்கதேசத்தில் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 



No comments

Powered by Blogger.