Header Ads



பறவைகளின் பாடல்களில் இருந்து பிறந்ததா மனித மொழி..?


"பறவைகள் வெளிப்படுத்தும் வெவ்வேறு வகையான ஒலிகள், மனிதர்கள் பேசும் மொழிகளை ஒத்தவை. அவற்றில் இருந்து மனித மொழி பிறந்திருக்கலாம்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

ஆதி மனிதர்கள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள, சங்கேத மொழிகளை பயன்படுத்தினர். அதில், இரண்டு அடுக்குகள் இருந்தன. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முதல் அடுக்கில், வாக்கியத்தை மாற்றி அமைத்துக்கொள்ள தேவையான தகவல்கள் இருக்கும். மற்றொரு அடுக்கு, வாக்கியத்தின், மொத்த அர்த்தத்தையும் நிர்ணயிக்கக் கூடியது. பறவைகள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் பல்வேறு வகையான ஓசைகளும், இதே தன்மை கொண்டிருப்பதை, அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த மொழியிலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ""ஆதிகாலத்தில், காடுகளில் வாழ்ந்த மனிதர்கள், பறவைகள் வெளிப்படுத்தும் ஓசையை கவனித்து, பேசக் கற்றுக்கொண்டிருப்பர். 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இரண்டு அடுக்குகளையும் ஒன்றிணைத்து, மேம்பட்ட, மொழி வடிவை உருவாக்கினர்,'' என, மொழியியல் பேராசிரியர், ஷிகெரு மியாகவா தெரிவித்து உள்ளார். 

No comments

Powered by Blogger.