Header Ads



ஊடகங்களுக்கு அறிக்கை விடும் எம்மவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்

ஊடகங்களுக்கும், இணையத்தளங்களுக்கும் செய்திகளையும், அறிக்கைகளையும் வழங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதே வேளை தாங்கள் வழங்கும் இந்த செய்திகளின் உண்மைத்தன்மை ஒரு பக்கம் இருக்க அறிக்கை விடும் நண்பர்களின் அறிக்கைகளும், கண்டனங்களும் ஆக்ரோஷமாக அமைந்திருப்பது தவிர்க்கப்பட் வேண்டிய விடயமாகும். 

கடந்த காலங்களில் இலைங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள எதிர்ப்புக்களுக்கும் அப்பட்டமான பொய் வதந்திகளுக்கும் முகம்கொடுத்துள்ள நாம் நீண்ட காலமாக இவ்விடயத்தில் பொறுமை காத்து வருவது பாராட்டுக்குரியதே. இருப்பினும் ஆங்காங்கு சில முஸ்லிம் நண்பர்களும், அரசியல் வாதிகளும், முக்கியமாக மத்திய கிழக்காசிய நாடுகளில் பணிபுரியும் நண்பர்களும் இணையத்தளங்களில் வெளியிடும் செய்திகள், உள்ளக்குமுறல், அறிக்கைகள் ஆனது சில வரையறைகளுக்குள் அமைந்திருக்க வேண்டியது கட்டாயமாகும். 

காரணம் இலங்கையில் உள்ள எல்லா சிங்களவர்களும் முஸ்லிம்களின் எதிரிகள் அல்லர். எல்லா பௌத்தர்களும் பொதுபலசென அமைப்பினர் அல்லர். அதிகளவான சிங்கள மக்கள் எமது நண்பர்கள், அயலவர்கள், எம்மோடு இணைந்து வாழ்பவர்கள். எம் சுக துக்கங்களில் பங்கெடுக்கும் அளவுக்கு எமக்கு நெருங்கியவர்கள். இப்படி இருக்க நமது கருத்துகள் அவர்களையும் நமக்கு எதிராக திருப்பிவிட வாய்ப்புக்கள் அதிகம்.

நான் ஒரு அரச பழ்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவன். இங்கு முஸ்லிம்களைவிட அதிகளவு சிங்கள தமிழ் மாணவர்கள் என்னோடு கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் நண்பர்களாக இணைந்து பழகி வருகிறோம். சில நேரங்களில் சில தவறான புரிதல்களால் பாதிக்கப்பட்டும் இருக்கிறோம். எமது இஸ்லாமிய நடைமுறையில் உள்ள சில விடயங்களை அவர்களது சூழல் அவர்களுக்கு தவறாக கற்றுக்கொடுத்தும் இருக்கின்றது. இவ்வாறான தவறான புரிதல்களை எம்மிடம் வந்து நேரடியாக அவர்கள் கேட்டும் இருக்கின்றனர்.

ஒரு சிங்கள நண்பன் என்னிடம் வந்து “நீங்கள் ஹஜ் பெருநாளுக்கு மாடுகளை அறுத்து அதிகாலையில் அதன் இரத்தத்தை புசித்தபின் தான் பள்ளிவாசலில் அல்லாஹ்வைத் தொழுவீர்களா ?’’ என்று கூட ஒருமுறை கேட்டுள்ளார். இப்படி எத்தனையோ விடயங்களில் அவர்கள் தவாறாக எம்மையும் எமது மார்க்கத்தையும் பற்றி உணர்ந்து வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் எமது சமூகத்தாரின் சில அணுகுமுறைகள் தான் என்பதில் தவறில்லை. எமது குறைகளையே இன்று அவர்கள் இஸ்லாத்தின் குறைகளாக கணிப்பிட்டுள்ளனர். இவருக்கு இப்படியான ஒரு எண்ணம் தோன்ற நமது சகோதரர்களின் ஏதோ ஒரு நடவடிக்கைதான் காரணமாக அமைந்திருக்கலாம் என எனக்கு எண்ணத்தோன்றுகிறது. 

நாம் அவர்களுக்கு எமது புனித மார்க்கத்தை பற்றியும், புண்ணியமான கடமைகளைப் பற்றியும் சரியான முறையில் தெளிவூட்ட மறந்து விட்டோம். இந்த நிலையில் பெரும்பான்மையினருக்கு எதிராக சில முஸ்லிம்கள் வெளியிடும் அறிக்கைகளும் கண்டனங்களும் நமக்கு பாதகமாக அமையாத வண்ணம் இருக்க வேண்டியது முக்கியமாகும்.

இன்று சிங்களவர்களுக்கு எதிராக நாம் அறிக்கை விடுவதைத் தவிருங்கள். பொது பல சேனா செய்யும் தவறுகளுக்கு முற்றுமுழுதான சிங்கள நண்பர்கள் பொறுப்பல்ல. நாம் விடும் ஒவ்வொரு ஆக்ரோசமான கருத்துக்களும் நமக்கு இன்னும் பல எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை மறக்க வேண்டாம்.

சில நண்பர்கள் முகப்புத்தகத்திலும், இணையத்தளங்களிலும், ஏன் இன்று சுவரொட்டிகளிலும் ஜிகாத் செய்யத் தயாராகுவோம், சிங்களவர்களின் தலையைக் கொய்வோம், அவர்களின் பொருளாதாரத்தை முடக்குவோம், அரசாங்கத்தை கவிழ்ப்போம் என வீர வசனம் பேசுவதை முற்றாக தவிருங்கள். இது இன்னுமொரு முஸ்லிமை பாதுகாக்க நீங்கள் செய்யும் உதவி.

காரணம் கிழக்கு மாகான முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிராக தைரியமாக பேச முடியும், அதே வேளை கண்டி, கொழும்பு, மற்று இதர மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் சிங்களவர்களின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகிறார்கள். சுற்றும் முற்றும் சிங்களவர்களோடு நண்பர்களாக பழகி வருகிறார்கள். குடும்ப உறவுகளாக பேணி வருகிறார்கள். பழ்கலைகலகங்களிலும், கல்வியற் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள், வெளி ஊர்களில் தொழில் புரியும் இளைஞர் யுவதிகள் என எத்தனையோ முஸ்லிம்களின் தொடர்புகளானது இன்று சிங்களவர்களோடு பின்னிப் பிணைந்து உள்ளது. 

எனவே நாம் விடும் அறிக்கைகளானது நம்மைத் தெளிவுபடுத்தும் அதே வேளை மற்றவர்களுக்கு அது எம்மீது எதிர்ப்பினை ஏற்படுத்தா வண்ணம் அமைய வேண்டும். அல்லாஹ் போதுமானவன்.

அக்கரைப்பற்று அஷ்ரப்.
வவுனியா வளாகம்
யாழ்ப்பாணப் பழ்கலைக்கழகம்.

6 comments:

  1. 04/97
    ُﺽْﺭَﺃ ْﻦُﻜَﺗ ْﻢَﻟَﺃ ﺍﻮُﻟﺎَﻗ ِۚﺽْﺭَﺄْﻟﺍ ﻲِﻓ َﻦﻴِﻔَﻌْﻀَﺘْﺴُﻣ ﺎَّﻨُﻛ ﺍﻮُﻟﺎَﻗ ْۖﻢُﺘﻨُﻛ َﻢﻴِﻓ ﺍﻮُﻟﺎَﻗ ْﻢِﻬِﺴُﻔﻧَﺃ ﻲِﻤِﻟﺎَﻇ ُﺔَﻜِﺋﺎَﻠَﻤْﻟﺍ ُﻢُﻫﺎَّﻓَﻮَﺗ َﻦﻳِﺬَّﻟﺍ َّﻥِﺇ ﺍًﺮﻴِﺼَﻣ ْﺕَﺀﺎَﺳَﻭ ُۖﻢَّﻨَﻬَﺟ ْﻢُﻫﺍَﻭْﺄَﻣ َﻚِﺌَٰﻟﻭُﺄَﻓ ۚﺎَﻬﻴِﻓ ﺍﻭُﺮِﺟﺎَﻬُﺘَﻓ ًﺔَﻌِﺳﺍَﻭ ِﻪَّﻠﻟﺍ

    When angels take the souls of those who die in sin against their souls, they say: "In what (plight) Were ye?" They reply: "Weak and oppressed Were we in the earth." They say: "Was not the earth of Allah spacious enough for you to move yourselves away (From evil)?" Such men will find their abode in Hell,- What an evil refuge!

    If we can't fight with this "kafeer/ guffar"
    We can do immigrate "HIJRATH"
    This is order from allah in the quran and sunnah by rasul "sal"

    ReplyDelete
  2. இது காலத்திற்கேற்ற அறிக்கை.இதில் குறிப்பிடப் பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மையானவை. எமது சகோதரர்கள் அவசர புத்தியினால் ஏதோ உளறி விடுகிறார்கள். இதன் எதிரொலி எவ்வாறு அமையும் என்பதை சிந்திப்பதில்லை.ஆக்ரோஷம் வரக்கூடிய சந்தர்பத்திலும் நிலை தடுமாறாமல் நிதானத்துடன் நடக்க வேண்டியது நமது பொறுப்பாகும்.

    ReplyDelete
  3. i have seen a human again that is you dear.

    ReplyDelete
  4. முஸ்லிம் அல்லாத நண்பர்களோடு பழகும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் எமது மார்கத்தை பற்றி அவர்களுக்கு தெளிவு படுத்தும் வகையிலமைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.வெறுமனே அவர்களோடு சகஜமாக பழகுவதோடும் அவர்கள் இஸ்லாத்தை பற்றி கேட்ட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிப்பதோடும் மட்டும் அல்லாமல் அவர்களாகவே எமது மார்க்கத்தை விளங்கிக்கொள்ள முனையும் வகையில் முஸ்லிம் சகோதர சகோதரிகளின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
    இன்று பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய நிருவனகளும் முஸ்லிம் மஜ்லிச்களும் நடத்தும் இஸ்லாமிய நிகழ்வுகள் வகுப்புக்கள் பெரும்பாலும் இஸ்லாஹ் உடன் தொடர்பானவையாகவே இருக்கின்றன. மாறாக நாங்கள் எமது சற்று மாறுதலான வடிவமைப்பில் முஸ்லிம் அல்லாதவர்களும் பங்கு பெறும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணம் akatrappadum.

    உதாரணமாக மேல் குறிப்பிட்ட கட்டுரையில் சகோதரர் அஷ்ரப் குறிப்பிட்ட ஒரு விடயம் , உல்ஹியா பற்றி தவறான புரிந்துனர்தலுடன் மாற்று மத சகோதரரால் எழுப்பப்பட்ட கேள்வி.இந்த கேள்விக்கான பதில்களை ஹஜ் பெருநாள் தின ஒன்று கூடல் ஒன்றை ஏற்பாடு செய்து அன்றைய தினத்தில் எங்களது செயற்பாடுகளையும் அவற்றிற்கான பின்னணிகளையும் அழகுற எடுத்துக்கூறலாம்.

    பொதுவான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பொதுவான கருத்துக்களுடன் இஸ்லாமிய சிந்தனைகளையும்,வரலாற்று உதாரணங்களையும் கூட அவர்களின் மனதில் படும்படி எடுத்தியம்பலாம்.
    சகோதரர் கூறியது போல் வரையறைகள் தாண்டிய அறிக்கைகளை விடுவதையும் , ஒரு சாரார் அவர்கள் இஸ்லாத்தை தவறான அடிப்படையில் புரிந்து கொண்டதன் பின்னணியில் செய்யும் குற்றத்திற்காக அவர்களை சார்ந்த முழு சமூகத்தையும் தூற்றுவதையும்,புறக்கணிப்பதையும் ,அவர்களின் குறைகளை வெளிப்படுத்துவதையும் விட்டுவிட்டு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் எங்கள் பிரச்சனைகளை தவக்கல் வைத்து விட்டு இஸ்லாத்தை அதன் சரியான வடிவிலும் மற்றவர்களால் அது சரியாக அறியப்படும் வகையிலும் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

    தன்சிலா பின்த் அமீர்
    வவுனியா வளாகம்
    யாழ்ப்பாணப் பழ்கலைக்கழகம்.

    ReplyDelete
  5. சிங்களவர்களில் எல்லோரும் நல்லவர்கள் என்று நீங்கள் எதை அடிப்படையாக வைத்துக்கூறுகின்றீர்கள்.உங்களிடம் பழகும் ,அல்லது கற்கும் சிலர்களை வைத்தா கூறுகின்றீர்கள்.அப்படியானால் பகுதி ,தொகுதியில் செல்வாக்குச்செலுத்துமோ?ஆயிரக்கணக்கான மாடுகளும் சில ஆடுகளும் வீதியில் சென்றால் கூறப்படுவது மாடுதானே? இங்கு கணிக்கப்படுவது பெரும்பாண்மையே.அதே போன்று பொது பல சேன போன்ற காடையர்களின்செயற்பாடுகளைச்செய்யாவிட்டாலும் ,பெரும்பான்மை சிங்களவர்கள் அவர்களை ஆதரிக்கின்றார்கள் என்பதே உன்மை.இதை எவனும் மறுக்க முடியாது,இதற்காக அடாவடிகளில் ஈடுபடவேண்டும் என்று கூறவரவில்லை,எதார்த்தத்தைக்கூறுகின்றேன்.உன்மையை மறைத்து ,பல மூத்த ஊடகவியலாளர்களும்கூட முயல்கனவு காண்பதும் யாருக்கோ வக்காலத்து வாங்க முயற்சிப்பதும்,நாம்அறியாத ஒன்றல்ல.சிங்களவர்களப்போன்ற் அன்னிய மதத்தவர்களுக்கு ,எமது மார்கத்தைப்பற்றி எடுத்துகூற வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமை.எடுத்துகூறாதது ஒவ்வொரருவரும் விட்ட பிழை, எல்லோரும் விட்ட பிழையை எல்லோருமே சரி செய்ய வேண்டும்.அல்லது எல்லோருமே பிழையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.இக்கட்டான இந்த நேரத்தில் பொறுமை காப்பவர்கள், தங்கள் கருத்துக்களைக்கூடவா கூற முடியாது.தலைமைத்துவங்களிலே இருப்பவர்கள் கூட தவறுகள் செய்யும்போது,உணர்ச்சி வசப்படும்போது,பொது மக்கள் உணர்ச்சி வசப்படுவது,எம்மாத்திரம் என்பதை சிந்தனை செய்யாமல் இப்படி எழுதுபவர்கள் சிந்தனை செய்யவேண்டும். சிங்களவர்கள் அல்லது தமிழ்ர்கள் உயிரிலும் மேலான எம்மார்க்கத்தை எம்மால் பிழையாக விழங்கிகொண்டார்கள் என்பது உன்மையல்ல,மாறாக அவர்கள் அவ்வாறு ஊட்டப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.விடையம் இவ்வாறிருக்க எதற்காக நம்மவர்கள்தான் காரணம் என்று முட்டாள்தனமாக எளுதியுள்ளீர்.பல் சமூகம் ஒரிடத்தில் வாழும்போது,குறிப்பிட்ட சமூகத்தின் சாதக பாதக விளைவுகளை ஏனையவர்கள்,எதிமறையாக சிந்தித்து பிழைகாண முயற்சி செய்தால் .குறித்தசமூகத்தின்மீது பழி சுமத்துவது மடமைத்தனமாகும்.

    ReplyDelete
  6. அல்ஹம்துலில்லாஹ்...
    நண்பரே நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை.. காரணம் என் கட்டுரையை நீங்கள் தெளிவாக உணரவில்லை என்றுதான் அர்த்தம். நான் எல்லா பெரும்பான்மையினரும் முஸ்லிம்களின் எதிரிகள் அல்ல என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். சில அறியாமை கொண்ட பெரும்பான்மையினத்தவர்களின் தவறுகள் போல நம் தவறுகளும் அமைந்துவிடக்கூடாது. இன்று முஸ்லிம்களுக்கு ஆதராவாக அதிகமான பெரும்பானமையினத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். நாம் விடும் கருத்துக்கள் காலப்போக்கில் அவர்களையும் எமக்கு எதிராக திருப்பி விடக்கூடாது என்பதே எனது கருத்து.

    உதராணமாக
    கண்டி கல்ஹின்னை பிரதேசத்தில் மௌலவி ஒருவரின் தொப்பியை அந்நிய மதத்தவர் காலால் மிதித்த சம்பவம் நடந்தேறி உள்ளது. அவ்வேளை அதனைத் தடுத்து, கண்டித்ததும் அதே அந்நிய மதத்தவர்களே.
    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பர்தா அணிந்த நான்கு முஸ்லிம் பெண்களை தாக்க வந்த அந்நியர்களை தடுத்து விரட்டியதும் அதே அந்நிய மதத்தவர்களே.
    மன்னம்பிட்டிய தபாலகத்திலும் இதே போன்று...
    இவ்வாறு நம்மை மதிக்கும் நமது கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும், நடுநிலையான சிந்தனை கொண்ட மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    இலங்கையின் ஒவ்வொரு மூளை முடுக்குகளிலும் முஸ்லிம்கல் வாழ்கிறார்கள், அவர்களுக்கு உங்களால் பாதுகாப்பு வழங்க முடியுமா?
    முஸ்லிம் தலைமைத்துவங்களை நம்பி இனி வாழ முடியுமா?
    பல்கலைக்கழகம், கல்லூரிகள், தொழில் பெட்டிகளில் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு நம்மால் பாதுகாப்பு வழங்க முடியுமா?

    இஸ்லாம் நமக்கு சொல்லித் தந்துள்ள எத்தனையோ கண்ணியமான பண்புகள் போதும் இவ்வுலகையே இஸ்லாத்தின் பக்கம் திருப்பிவிட முடியும். நாம் எங்கே இஸ்லாமிய வழிமுறையை கையாள்கிறோம்? நமக்குள்ளே நாம் சண்டையிட்டுக்கொண்டு, ஒற்றுமையின்றி, ஒருவருக்கொருவர் எதிர்மாறாக அல்லாஹ்வை மறந்து வாழும் வரை நமக்கு வெற்றி கிடைப்பது கடினம்.

    அல்லாஹிவிடம் அழகிய முறையில் துஅ செய்து, இஸ்லாம் சொல்லும் இனிய பண்புகளைக் கையாண்டால், அந்நிய மதத்தவரும் நம்மை மதிக்கும் காலம் தொலைவில் இல்லை.

    அஷ்ரப்.

    ReplyDelete

Powered by Blogger.