Header Ads



பௌத்த இனவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் ஹர்த்தால் கைவிடப்பட்டது



பொத்துவில் பிரதேசத்தில் தூபி அமைக்கும் இடம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது மக்களால் நாளை (2013.03.21) முதல் நான்கு நாட்களுக்கு தொடராக  அனுஷ்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் கைவிடப்பட்டுள்ளது.

அம்பாரை அரசாங்க அதிபர் பொத்துவில் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், உலமா சபையினர் ஆகியோர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஹர்த்தாலை கைவிடுவதென இணக்கம்  காணப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.