Header Ads



அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல் - ஆயிரத்திற்கும் அதிக விமானங்கள் ரத்து



அமெரிக்காவின் வடபகுதிகளை மீண்டும் பனிப்புயல் தாக்க தொடங்கியுள்ளது. மின்னசோட்டா மாநிலம் தொடங்கி விர்ஜினியா வரை 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் வீசியதால் சாலைகளில் சுமார் 2 அடி பனி உறைந்துள்ளது. இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அவசர - அவசியம் ஏற்பட்டாலொழிய சாலை பயணங்களை தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சாலைகளில் உறைந்து கிடக்கும் பனியை அகற்றும் பணியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

பனிப்புயல் மேலும் வலுவடையக்கூடும் என்பதால் சிகாகோ நகரில் உள்ள ஓ ஹரே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மிட்வே விமான நிலையத்தில் 240 விமானங்களும், மின்னயபோலீஸ், மின்னசோட்டா விமான நிலையங்களில் சுமார் 100 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தலைநகர் வாஷிங்டனை இன்று பனிப்புயல் தாக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு சார்ந்த சில முக்கிய சந்திப்புகளும் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.