படுத்துக்கொண்டே லேப்டாப் பார்க்க மினி ஸ்டாண்ட்
படுத்துக் கொண்டே லேப்டாப் பார்க்கும் வகையிலான மினி ஸ்டாண்டை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கம்ப்யூட்டர், லேப்டாப், பாம்டாப், டேப்லட், அகன்றதிரை ஸ்மார்ட்போன். மனிதர்களின் ‘இணைபிரியா நண்பர்கள்’ பட்டியல் அதிகமாகிக் கொண்டே போகிறது. பெரும்பாலான நேரத்தை இதுபோன்ற ஒளிர்திரைகள் முன்னாலேயே செலவிடுகிறார்கள் பலர். மாலை நேரத்தை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் முன்பு செலவிடுபவர்கள், பின்னர் லேப்டாப்பை கையில் எடுக்கிறார்கள்.
கண் அயரும் நேரம் வரை அது கையில் இருக்கிறது. இன்டர்நெட் பார்க்க தூக்கம் தொந்தரவாக இருக்கிறதே என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களை கருத்தில் கொண்டு லேப்டாப் ஸ்டாண்டை ஜப்பான் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. இரண்டு கால்கள் கொண்ட டேபிள் லேம்ப் போல இருக்கிறது. தலையணைக்கு இரு பக்கமும் பொருத்தி, அதில் லேப்டாப்பை தலைகீழாக தொங்கவிட வேண்டும். கண் சொக்கி தூக்கம் வரும் வரை பிரவுசிங் செய்துகொண்டே இருக்கலாம்.
Post a Comment