Header Ads



ஷிரானி பண்டாரநாயக்கவின் அதிரடி..!



இலங்கை சட்டத்தரணிகள் சங்க வருடாந்தக் கூட்டத்திற்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தலைமை தாங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 39ம் வருடாந்தக் கூட்டம் இன்றைய தினம் 30-03-2013 நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு நாட்டின் 43ம் பிரதம நீதியரசரும், சர்ச்சைக்குரிய விதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டருமான ஷிரானி பண்டாரநாயக்க தலைமை தாங்கினார்.

தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை எனவும், நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே சட்ட மா அதிபர் பாலி பெர்னாண்டோ இந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்வில் உத்தியோகபூர்வ பிரதம அதிதி இல்லாத காரணத்தினால் முன்னாள் பிரதம நீதியரசர் பிரதம அதிதியாக செயற்பட்டார்.

முன்னாள் பிரதம நீதியரசருக்கு பான்ட் வாத்தியக் கலைஞர்களும், நடனக் கலைஞர்களும் வரவேற்பு அளித்ததுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலாவதாக குத்து விளக்கு ஏற்றியது மட்டுமல்லாமல் ஷிரானி பண்டாரநாயக்க பிரதம அதிதி அமரும் ஆசனத்தில் அமர்ந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ மரபு ரீதியான சின்னத்தை புதிய தலைவர் உபுல் ஜயசூரியவிடம் ஒப்படைத்தார்.

அதன் பின்னர் புதிய தலைவர் உபுல் ஜயசூரியவிற்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, லக்ஸ்மன் கிரியல்ல, மாதுலுவே சோபித தேரர் மற்றும் தம்ர அமில தேரர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. Gtn

1 comment:

Powered by Blogger.