சூதாட்டத்தை தடுக்க முடியுமா...? பொதுபல சேனாவுக்கு பகிரங்க சவால்
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சதசில்வா, பொது பொதுபலசேனா அமைப்பிடம் சவால் ஒன்றை முன்வைத்தார்.
இலங்கையின் சூதாட்டம் மற்றும் திட்டமிட்ட அபிவிருத்தி சட்ட மூலங்களில் திருத்தங்களை ஏற்படுத்தி, நாட்டை தாய்லாந்தினை போல, சூதாட்டதை முதல் தொழிலாக கொண்ட நாடாக மாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது.
முடியுமாக இருந்தால் இந்த சட்ட மூலத்தை கற்று, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுபல சேனாவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா சவால் விடுத்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கலகொடஅத்தே தேரர், பொது பல சேனா என்பது நாட்டின் காவற்துறை இல்லை என்றும், இது குறித்து அமைப்பினுள் பேசப்படுவதாகவும் தெரிவித்தார்.
adhu nattuku nallathu appa nalla olukam muslim katupatu mariyathai sarilappa
ReplyDelete