Header Ads



சாதனை படைத்தது பாகிஸ்தான்



பாகிஸ்தான் பாராளுமன்ற வரலாற்றிலேயே, ஒரு தேசிய சட்டமன்றம் தனது ஐந்து வருடம் கலைக்கப்பெறாமல் முழுமையாக நடந்தேறியது இதுவே முதல் முறையாகும். இந்த 13வது தேசிய சட்டமன்றம் தனது 50 சட்டசபை கூட்டத்தில், அடுத்த தேர்தலை மே மாதம் நடத்துவது குறித்து நேற்று தீர்மானித்தது.   

இந்த சபைக்கூட்டத்துக்கு தலைவராக இருந்த சட்ட அமைச்சர் யாஸ்மின் ரகுமான், இந்த வரலாற்று வெற்றியை நமக்கு கொடுத்ததற்காக நான் அல்லாவை பிரார்த்திக்கிறேன். அடுத்த தேசிய பாராளுமன்றமும் இதை போன்றே ஜனநாயக முறைப்படி தொடரவேண்டும் என்று வேண்டினார். 

ஒரு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம், அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு மாறுவது பாகிஸ்தான் வாழ்நாள் அரசியலில் இதுவே முதல் முறையாகும். 

No comments

Powered by Blogger.