Header Ads



நாட்டில் மதங்களுக்கிடையே எந்த முறுகலும் இல்லை - மத பிரதியமைச்சர் அடித்துக்கூறுகிறார்


ஹலால் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறையை தாம் பொறுப்பேற்க முடியாது என்று இலங்கை அரசாங்க தரப்பு கூறியுள்ளது. இலங்கையின் பௌத்த சாஸனம் மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்த்தன அவர்களே இதனை தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா என்னும் பௌத்த கடும்போக்கு அமைப்பு ஒன்று உணவுகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் முஸ்லிம்களின் நடைமுறையை விமர்சனம் செய்ததுடன் அந்த நடைமுறையை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில் இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அரசாங்கமே எடுத்து நடத்தலாம் என்று இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பு கேட்டிருந்தது.

ஆனால் இதனை தற்போது அரசாங்க அமைச்சர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

மதங்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்படும் தருணத்தில் மாத்திரமே தாம் தலையீடு செய்ய முடியும் என்றும் தற்போது அதற்கான நிலைமை இல்லாத காரணத்தினால் தாம் அதில் தலையிட முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஹலால் என்பது முஸ்லிம்களின் மதத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்பதால், அதற்கான சான்றிதழ்களை வழங்குவதை இஸ்லாமிய அமைப்பு ஒன்றே மெற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். bbc

3 comments:

  1. அவர் சொல்வது சரிதானே... அப்படி பாரதூரமான பிரச்சினை இருந்திருந்தால் அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்திருப்பார்கள்... முக்கியமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனது எதிர்ப்பினை தெரிவித்திருப்பார்.. அப்படி ஒரு எதிப்புகள் ஒன்றும் இல்லைதானே.

    ReplyDelete
  2. Dear minister,

    where are you? You are too late dear. In your final decision no benefits on your side we know therefore you say like these. And no clashes among religions but one team with support of the government are barking in the streets for more than 5 months you don't know?

    ReplyDelete
  3. BM.SABRY SEUSL
    மதங்களுக்கிடையில் முறுகள் இல்லை என்பது உண்மை. எனினும் பொது பால சேனா என்கின்ற தனியொரு பிற்போக்குவாத அமைப்பினரால் இஸ்லாத்திற்க்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல்வேறு வகையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது மறுக்க முடியாத மற்றும் மனிதம் என்ற பண்பினை நேசி்ப்பவா்களினால் சகிக்க முடியாத நடவடிக்கையாகும். இதனை முளையிலேயே அகற்றுவதற்கான பொறுப்பான நடவடிக்கையினை எடுப்பதனையே சமாதானத்தினையும் சகவாழ்வினையும் விரும்பும் ஒட்டு மொத்த சமூகத்தினதும் எதிர்பார்ப்பாகும்.

    ReplyDelete

Powered by Blogger.