Header Ads



தமிழ்நாட்டில் மற்றுமொரு பௌத்த பிக்கு தாக்குதல்


தமிழ்நாடு வந்த இலங்கை புத்த பிக்கு மீது தஞ்சாவூரிலும், திருச்சியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆன்மீக குழுவுடன் இன்று 18-03-2013 சென்னை மத்திய ரயில் நிலையம் வந்த புத்த பிக்குவை கடுமையாக சிலர் தாக்கியுள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. 

இக்குழுவில் புத்த பிக்கு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர். "அங்கே தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிக்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. Vi


9 comments:

  1. இதுவரைக்கும் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடக்கவில்லை இப்போது நடக்கின்றது இதற்கான் காரணம் பொதுபலசேன போன்ற இனவெறியர்களின் தற்போதய செயற்பாடுகள்தான் இவைகளை கண்காணித்துள்ள வெளினாட்டு மக்கள் பெளத்த பிக்குகள்மீது மீகமோசமானளவு கோபத்திலுள்ளனர் அதன்பிரதிபலனானதுதான் பிக்குகள் தாக்கப்டுவது, இதற்கு முளுப்பொறுப்பும் பொதுபலசேன போன்ற குளுக்கள்தான் பதில் சொல்லவேண்டும். பொதுபலசேன வின் செயற்பாடுகளின் விளைவுகள்தான் இது.

    ReplyDelete
  2. than vinai thannai sudum...Muslimhalin manathai nohaditha ungalukku athukkuriya thandanaiyai allah veru oruthar moolamaha thanthirukkiran. ALLAH IS GREAT.

    ReplyDelete
  3. Ilangai muslimkalukku ethavathu nadanthal India muslimkal summa irunthu vidkkudathu

    ReplyDelete
  4. உவன் பொதுபல சேனா குண்டன் என்றால் இன்னும் போடனும். இல்லாவிட்டால் இது ஒரு கிரைம். குற்றவாளியை கண்டு கூட்டில் அடடைக்க வேண்டும்.

    ReplyDelete
  5. எங்கயோ விதைச்சத எங்கயோ அறுவடை செய்கிறாங்களாக்கும்.........

    ReplyDelete
  6. thaan matra jaadhiya adikkum poozu azu sari matha jaazi karanwal thanaku adikum poozu azu pilei aahuma

    ReplyDelete
  7. இறைவன் நாடியதே நடக்கிறது

    ReplyDelete
  8. எந்த விதத்திலும் நியாயப் படுத்த முடியாத "கெட்ட" செயல். யாரிடமோ உள்ள கோபத்தை யாரிடமோ காட்டுவது புத்திக்கு சரியாகப் புலப்படவில்லை. மக்கள் மன்றத்தில் comment அடிக்கும் சகோதரர்களே, நிதானமாக கருத்துக்களை முன்வையுங்கள். உங்கள் கருத்துக்களால் நமக்கு சார்பான பெரும்பான்மை சகோதரர்கள் நம்முடன் பகைத்துக் கொள்ளக் கூடும். ஒரு நம்பிக்கையாளன் இச் செயலை எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.