சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்பாடு - இஸ்ரேல் குற்றச்சாட்டு
சிரியாவில் கிளர்ச்சிக்காரர்கள், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்' என, இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, அந்நாட்டில் கிளர்ச்சிக்காரர்கள் இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க அரசு வான்வழி தாக்குதலை நடத்துகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆயுத உதவி செய்வதால், அவர்களும், அரசுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சண்டையால், 70 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். ஆறு லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் ராணுவ அமைச்சராக சமீபத்தில் பதவியேற்ற, யுவல் ஸ்டெய்ன்டிஸ் குறிப்பிடுகையில், ""சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமமொன்றில், கிளர்ச்சிக்காரர்கள், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ரசாயன ஆயுதங்களை, அல்குவைதா மற்றும் ஹெஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு, கிளர்ச்சியாளர்கள் வழங்கி வருகின்றனர்,'' என்றார். ஆனால், "இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை' என, அமெரிக்கா மறுத்துள்ளது.
இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.
Post a Comment