'ஹலால் தொடர்பில் அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுத்தருமென முஸ்லிம்கள் நம்புகின்றனர்'
ஹலால் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்துள்ள அமைச்சரவை உபகுழு முஸ்லிம்களுக்கு சிறந்ததொரு தீர்வை பெற்றுத்தருமென முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் வழங்கிய அமீன் மேலும் தெரிவித்ததாவது,
ஹலால் தொடர்பில் தற்பொது ஆராயந்துவரும் அமைச்சரவை உபகுழுவில் இடதுசாரி கட்சித் தலைவர்களான டியு. குணசேகர, பேராசிரியர் திஸ்ஸவிதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தோவனந்தா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை ஓரளவேனும் புரிந்துகொண்டவர்கள்.
இவர்களுக்கு பக்கபலமாக முஸ்லிம் அமைச்சர்களும் இந்த அமைச்சரவை உபகுழுவில் இடம்பெற்றுள்ளனர். முஸ்லிம்களின் நியாயத்தை இந்த அமைச்சரவை உபகுழு கருத்திற்கொள்ளுமென முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது. அமைச்சரவை உபகுழுவின் தீர்மானமானது முஸ்லிம் சமூகத்தை பொருத்தமட்டில் முக்கியமானது.
ஏனென்றால் அகில இலங்கை உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை கையேற்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது. அதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது. இந்நிலையில் அமைச்சரவையின் உபகுழுவின் தீர்மானத்தை முழுநாட்டு மக்களும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கம் ஹலால் நெருக்கடி தொடர்பில் சிறந்த தீர்வை பெற்றுத்தருமென்பதுதான் இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகுமெனவும் அவர் மேலும் தெரிவத்தார்.
அரசாங்கம் சில வேளைகளில் தீர்வு பெற்றுத்தரலாம்.ஆனால் எப்போது என்பதுதான் தெரியாது?
ReplyDeletedont expect so much from thise government,
ReplyDeleteour muslim MP , and puttalam buruwa says sofar no any mosque breaking incidents
and red towel says bring the proof n he will take the actions
i dont know weather he is living in sri lanka and watching news in channels/??
i thing he is waiting to take actions until killed the all muslim n burn their shops as it happened in 1983 for tamils,
thoes thugs and rouges ( yellow robs) , balu bala sena is backed by this government