ஆஸாத் சாலி மீதான முறைப்பாட்டை வாபஸ் பெறுங்கள் - முஸ்லிம்கள் வலியுறுத்து
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஹசன் மௌலானா ஆஸாத் சாலி மீது சீ.ஐ.டி. மேற்கொண்ட முறைப்பாடுகளை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமென முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் அறியவருவதாவது,
இன்று வெள்ளிக்கிழமை, 22 ஆம் திகதி தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் ஹசன் மௌலானாவை சந்தித்துள்ள சில முஸ்லிம் சட்டத்தரணிகளும், முஸ்லிம் பிரமுகர்களும், ஆஸாத் சாலி மீதான முறைப்பாடுகளை ஹசன் மௌலானா உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து ஆஸாத் சாலிக்கு எதிரான 5 முறைப்பாடுகளில் சிலவற்றை வாபஸ் பெற்றுக்கொள்ள ஹசன் மௌலானா இணக்கம் வெளியிட்டதாக குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் மூலமாகவும், மற்றும் சில நம்பகரமான விட்டாரங்களிலிருந்தும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
News is not clear enough. who is Hazan Moulaana and who is Aasath Saali?
ReplyDeletewaww
ReplyDeleteசகோதரர்களே!!
ReplyDeleteஇவர்கள் அனைவரும் "பிணம் தின்னிக் கழுகுகள்." அப்பட்டமான அரசியல் காய் நகர்த்தல்கள் தான் இவைகள். இவர்கள் சொந்த நலனுக்காக சமூகத்தின் பிரச்சினையை பயன்படுத்துகின்றனர். விழுந்துவிட்ட அரசியல் வாழ்க்கையை இந்தப் பிரச்சினையை வைத்து தூக்க நினைக்கின்றனர். நம்பிவிடவே வேண்டாம். ஏமாறும் கூட்டம் நாமல்ல என பாடம் படிப்பிப்போம். நமது பாதுகாப்பிற்கு நாம் தான் முன்வர வேண்டும். அமெரிக்காவின் கையாளாய் நிற்கும் நாடுகளுக்கு அறிவித்து என்ன பயன்? இவர் பிரபல்யம் அடைந்து விடுவார் என்று மற்றவர். இவர்கள் அனைவரும் நமது பிரச்சினையை யார் பயன்படுத்துவது என்பதில் போட்டி போடுகின்றனர். நான்றாக சிந்தியுங்கள் இந்த அரசியல் கூட்டத்தின் உண்மை நோக்கம் புரியும்.
yaaru inda hasan moulana??? sivappu thoppiya?
ReplyDeletehii
ReplyDelete