பேருவளையில் முஸ்லிம் எதிர்ப்பு போஸ்டர்கள் (படங்கள்)
(அஹமட் ரூமி)
பேருவளை மற்றும் அளுத்கமை பகுதிகளில் நேற்றிரவு (02.03.2013) ஹலாலுக்கெதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 'இந்த சிங்கள நாடு எங்களுடையது', 'இது விழித்தெழுவதற்கான காலம்', 'ஹலாலை புறக்கணிப்போம்' 'ஹலால் எங்களுக்கு ஹராம்' போன்ற வாசகங்கள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. 'பேருவளை சிங்களவர்கள் நாம்' என கீழ்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று அளுத்கமை பகுதியில் முஸ்லிம்கள் மாடுகளை அறுப்பதற்கான இடத்திற்கு பொதுபல சேன அமைப்பினர் 2 பஸ்களில் வந்ததையடுத்து பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து பொலிஸாரும், சுகாதார அதிகாரிகளும் ஸ்தலத்திற்கு விஜயம்செய்து இது சட்டரீதியானதென பொதுபல சேனா அமைப்பிடம் அனுமதிவழங்கப்பட்ட பத்திரங்களை காண்பித்ததையடுத்து மூக்குடைந்தவர்களாய் அங்கிருந்து பிக்குகளும், அவர்களது குழுவும் சென்றுள்ளனர். இருந்தபோதும் இப்பிரதேச முஸ்லிம்கள் பொதுபல சேனா அமைப்பின் இந்த காழ்ப்புணாச்சிமிக்க நடவடிக்கையால் நொந்தபோயுள்ளனர். இவ்வாறான கசப்பான சம்பவத்தைத்தொடர்ந்தே நேற்றிரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காலி வீதி, மத்துகம வீதி, பஸ் தரிப்பிடம், பொதச்சந்தை, கிராமங்கள் என எல்லா இடங்களிலும் இப்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Post a Comment