Header Ads



சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர் - கடுகன்னாவ விஹாராதிபதி



சிங்கள முஸ்லிம் மக்களுடைய உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இன்று இந்த உறவு புதிதாக ஏற்பாட்டதொதன்றல்ல. .பொது விடயங்களில் கலந்து சிறப்பதைப் போன்று  திருமண வைபவங்கள்  சமய, கலாசார விழாக்கள், சுக துக்கம் போன்ற முக்கிய பல்வேறு நிகழ்வுகளின் போது நாங்கள் ஒன்று பட்டும் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வருகின்றோம்  கடுகன்னாவ  கொட்டபோகொட மஹாவிஹாராதிபதி தெரிவித்தார்.

கடுகன்னாவ மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி தயாரத்னவின் வேண்டுகோளின் பிரகாரம் தெனுவர முஸ்லிம் நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் பெருந்தொகையான வைத்திய உபகரணங்கள்  வழங்கி வைக்கும் நிகழ்வு கடுகன்னாவ மாவட்ட வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் மாவட்ட வைத்திய அதிகாரி தயாரத்னவின் தலைமையில் 08 -03-2013 நடைபெற்றது.

விஹாராதிபதி தொடர்ந்து பேசுகையில்,,

அன்று எங்களுடைய அரசியல் பிரதிநிதியாக தபால் துறை அமைச்சர் இம்தியாஸ் விளங்கனார். அவர் எந்தவிதமான இன மத குல வேறுபாடின்றி சேவையாற்றினார். அவர் பாலிமொழியை மிகத் திறன்படக் கற்றிருந்தார். அவர் சிங்கள மக்களை விட சிறந்த முறையில் பௌத்த சமயத்தின் அறக் கருத்துக்களை வியாக்கியானம் செய்வார். இதனை நாங்கள் மிகுந்து ஆர்வத்துடன் கேட்போம். அவர் தம் பிரதேசத்திற்கு ஆற்றிய பணிகள் ஏராளம். அதேபோல் நாங்கள் அனைவரும் தத்தமது சமய கலாசார நடவடிக்கைளுக்கு  ஏற்ப கௌரவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றோம்.

வைத்தியசாலை என்பது  இந்நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் உரித்தான ஒன்று. இந்த வைத்தியாசலைக்கு சிங்கள் முஸ்லிம், தமிழ் மக்கள் யாவரும் இங்கே வருகை தருகின்றார்கள். தம் பிரதேச வைத்தியசாலையினை அதற்குத் தேவையான சகல வளங்களையும் கொண்டதாக உள்ளன. எனினும் சில சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்தக் குறைபாடுகளை தனவந்தர்கள் மூலமாகவும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இந்த வைத்தியசாலையின் குறைபாட்டை நிவர்த்தி செய்து வருகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் தெனுவர முஸ்லிம் நட்புறவு ஒன்றியத்தின் பங்களிப்பு கிடைத்துள்ளது. அது எங்களுடைய வைத்தியசாலையில் காணப்பட்ட பெரும் குறைபாடா விளங்கிய தேவையொன்றை நிவர்த்தி செய்யக் கூடியதாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊராப்பொல ஸ்ரீ ஆதயராஜ விஹாராதிபதி கடுகன்னாவ நகர சபையின் நகரபிதா அபே சிரிவர்தன, கடுகன்னாவ நகர சபையின் பிரதி நகரபிதா மொஹிதீன், நகர சபையின் எதிர்கட்சித் தலைவர் சிசிர அபேகுனவர்தன , கடுகன்னாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிரி, தெனுவர முஸ்லிம் நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளர் முன்னாள் ஓய்வு பெற்ற மத்தியமாகாண கல்விச் செயலாளர் ஏ. எம் ரீசா, அதன்  அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கண்டி ஐடெக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஐ. ஐனுடீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




1 comment:

  1. this short of freindship at thid curcial time is very very important.

    ReplyDelete

Powered by Blogger.