Header Ads



மத்தல விமான நிலையத்தில் பறவைகள் தொல்லை - விமான விபத்து தவிர்க்கப்பட்டது



புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் ஒன்று பாரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. 

நேற்று முன்தினம் மாலேயில் இருந்து வந்த யு.எல்- 114 என்ற விமானம், மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றபோதே, இந்த விபத்து நேரிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

மத்தல விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தின் முன்புறத்தில் தாக்கியது.  இதனால் விமானத்தின் முன்புறக் கண்ணாடிகள் சேதமடைந்தன.  விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், சிறிலங்கன் எயர்லைன்ஸ் மூத்த அதிகாரிகளும், விமானிகளும் சேதங்களை ஆய்வு செய்தனர். 

முன்புறக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், துப்பாக்கிக் குண்டுத் துளை போன்ற பல துளைகளும் காணப்பட்டதாக மூத்த விமானி ஒருவர் தெரிவித்துள்ளார்.  அழுக்கத்தினால், கண்ணாடி உடைந்திருந்தால், விமானி வெளியே தூக்கி வீசப்பட்டிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். 

அந்த விமானத்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர்.  அவர்களில் மத்தலவில் இருந்து கட்டுநாயக்க செல்வதற்காக ஏறிய ஜனாதிபதியின் நான்கு உறவினர்களும் அடங்குவர்.  

பறவைகள், மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியிலேயே மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  அங்கு விமானங்களின் இரைச்சல் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு பெரும் தொந்தரவாக மாறியுள்ளது. 

மத்தல விமான நிலையம் திறக்கப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவும் இதுபோன்றதொரு பாரிய விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. பரீட்சார்த்தமாகத் தரையிறக்கப்பட்ட விமானம் ஒன்றின் மீது பறவைக் கூட்டம் மோதியதால், அந்த விமானத்தை செலுத்திய இளைய விமானி நிலைகுலைந்து போயிருந்தார். 

பின்னர் மூத்த விமானி ஒருவர் விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் தான், அந்த விமானம் விபத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. பேராசை பெரும் நஸ்டம்

    ReplyDelete
  2. சம்பிக்கவிடம் குர்ஆனை கேட்டெடுத்து கொஞ்சம் வாசித்துப் பாருங்க. முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான கஃபா ஆலயத்தைத் தாக்க வந்த யமன் நாட்டு அப்ரஹாவின் படையை அழித்து நொறுக்க இறைவன் அனுப்பியதும் சில சிட்டுக் குருவிகளைத்தான். இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களைத் தாக்கும்போது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இறைவன் அனுப்பிய ஒரு sample என்று நினைக்கிறேன். முஸ்லிம்களை அவர்களின் பாட்டில் வாழவிடுங்கள். பெண்களின் மானத்தைக் காக்கும் அவர்களின் ஆடையைக் கழற்ற முயலாதீர்கள். உங்களுக்கும் பொதுபல சேனவுக்கும் தேவையானால் உங்கள் சமூகப் பெண்களுக்கு இரு துண்டு baby suite அணிந்து அழகு பாருங்கள். ரோட்டில் போகும் பாம்பைத் தூக்கி மடியில் போடாதீர்கள். உங்களை வழிநடாத்தும் sorry நீங்கள் வழி நடாத்தும் பொது பல சேனாவுக்கும் இதனைச் சொல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.