வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - காத்தான்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச கடற்பகுதிகளில் கடல் காற்றுடன் சற்று அலை கொந்தளிப்பாக காணப்படுகின்றது.இதனால் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. வெளியிடங்களிலிருந்து மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு இங்கு கொண்டு வருவதால் குறித்த பிரதேசத்தில் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இது தொடர்பாக மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் நாம் கடலுக்குச் செல்லாததால் எமது அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகிறோம்.சீரான கால நிலை சுமார் இரு வாரத்திற்கும் மேலாக காணப்பட்ட பின்னறும் மீண்டும் சீரற்ற கால நிலை நிலவுகின்றது என அவர்கள் குறிப்பிட்;டனர்.
இதவேளை வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிப்பதுடன் மீன்களின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment