திடீர் வபாத்துக்களின் போது தெரிந்து வைத்திருக்க வேண்டியவை
ஐ.எல்.எம் சியாது
(புத்தளம் முந்தல் திடீர் மரண விசாரணை அதிகாரி)
ஒருவர் நோயினால் பாதிக்கப்பட்டு அல்லது வயோதிபம் அடைந்த நிலையில் மரணம் நிகழ்ந்தால் அது இயற்கை மரணம். நோய் ஏற்பட்டு 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்தால் அல்லது கொலை,தற்கொலை,விபத்து,போன்றவைகளால் மரணம் நிகழ்ந்தால் அவை திடீர் மரணம் ஆகும்.
வீட்டில் நடக்கும் சாதாரண மரணங்களுக்கு கிராம அதிகாரியால் உறுதிப்படுத்திய பின்னர் பிரதேச பிறப்பு இறப்பு பதிவாளரினால் மரண சான்றிதழ் வழங்கப்படும் திடீர் மரணங்களுக்கு மரண விசாரணை அதிகாரியினால் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்ட பின்னர் வழங்கப்படும் ஆவணத்தை சமர்ப்பித்தால், பிரதேச பிறப்பு இறப்பு பதிவாளரினால் மரண சான்றிதழ் வழங்கப்படும்.
திடீர் மரணங்கள் வீட்டில,; வீதியில,; வைத்தியசாலையில் இன்னும் பல இடங்களில் இடம்பெறலாம் வைத்தியசாலையில் ஒருவர் மரணித்தால் மரணித்து விட்டார் என ஊகித்ததும்; வைத்தியசாலை வைத்தியர் 02 மணித்தியாலத்துக்கு பிறகு உறுதி செய்து விட்டு மரணத்துக்கான காரணம் அவரால் சிரியாக கூற முடியாவிட்டால் அவரிடம் மரண பரிசேதனைக்கு உற்படுத்த வேண்டிய மரணமா? என்பதை அறிந்து அவ்வாரானது என்றால் வைத்தியசாலை ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்து பொலிஸ் நிலையம் ஊடாக மரண விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
வீட்டில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அவரை வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல பயப்படுபது எம்மில் பரவலாக காணப்படும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது நோயாளிகளை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லாமல் இருப்பது தவறாகும் வைத்தியர்களாளே மரணித்து விட்டார் என்று உறுதியாக சொல்ல இரண்டு மணித்தியாலங்கள் தேவை என்றால் எப்படி எங்கள் அநுபவங்களால் மரணித்து விடுவார் என சொல்வது இவ்வாறு எடுத்து சென்று வைத்தியம் செய்யாததால் அதுவே அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
நோயாளிகள் மருந்து எடுக்கும் வைத்திய அறிக்கைகளை வைத்திருப்பது மற்றுமன்றி உறவினர்களுக்கும் அதுபற்றி அறிவித்து வைத்து இருக்க வேண்டும் மரண விசாரணைகளின் போது வைத்திய பரிசோதனைகளில் (வெட்டி பரிசோதனை) செய்வதில் இருந்து தவிர்த்து மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட இந்த அறிக்கைகள் துணைபுரியும்.
மரணத்துக்கான காரணம் உண்மையில் அவரது ஆயுள் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டது முடிந்து விட்டது என்பது உண்மை இருந்தாலும் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுகிறது.
வைத்திய பரிசோதனை (வெட்டி பரிசோதனை) நடாத்துவதன் நோக்கம் அவ்வாரான மரணங்களை அரசாங்கம் முடிந்தளவு கட்டுப்படுத்துவதுதான்.
சிறுகுழந்தைகள் பிறந்தவுடன் மரணித்தால் அவைகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் அடுத்த பிரசவத்தில் அவ்வாறு நிகழாமல் பாதுகாக்கலாம் வாகன விபத்துகளின் போது சரியான குற்றவாளி கண்டறியவும் காப்புறுதி நிறுவனங்களின் வழக்கு விடயங்களுக்கும் நீதிபதியின் உத்தரவுக்கு அமையவும் கட்டாயம் வைத்திய பரிசோதனை செய்ய வேண்டி வரும்.
சந்தேகமான மரணங்கள் இடம்பெற்றால் சடலங்களை அப்புறப்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். திடீர் மரணம் ஒன்று நிகழ்ந்து விட்டால் சடலத்தை (மய்யித்தை) பரிசோதனையை அவசரமாக முடிக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் தங்களுக்கு தெரிந்த வழிகளிள் எல்லாம் முயற்சிப்பதை விட்டுவிட்டு அநுபவம் உடைய யாராவது ஒருவரின் ஆலோசனைக்கு அமைய செயல்படுவது சிறந்தது முஸ்லிம் மரணங்களை 24 மணி நேரத்துக்குள் வழங்க செயல்படுமாறு அரசினால் சட்டத்தில் பணிக்கப்பட்டுள்ளது
This is an important notice to all the Muslims Living in Sri Lanka, As we will die one day, so this information will help you one day.
ReplyDeleteFurther I need to know is there any particular team or organization to fulfill this requirement, I mean to help and consult to get the body from the hospital.
If there is no....
We should form a team who is with the knowledge to get the bodies expeditiously.