முஸ்லிம் சமூகமும் ஒரு மேல்சபை (சூரா) வின் உடனடித் தேவையும்..!
(AshSeikh S.H.M.Faleel)
இலங்கை வாழ் முஸ்லிம்களது சன்மார்க்க விவகாரங்களில் இறுதித் தீர்மானமெடுக்கும் உயர் சபையாக அ.இ.ஜ.உ இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் மார்க்க விடயங்களில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மனித வாழ்வுடன் நாட்டு விவகாரங்களுடன் சம்பந்நப்பட்ட விவகாரங்கள் அனைத்திலும் அவர்களுக்குத் தெளிவும் அனுபவமும் இருக்கும் என எதிர்பார்ப்பது முறையல்ல.
எனவே, சமூகத்தில் தோன்றும் சகல துறைப் பிரச்சினைகளிலும் உலமா சபையே முடிவெடுக்க வேண்டும் எனக் கூறமுடியாது. ஜெனிவாவுக்கு உலமாக்கள் போவது நல்லதா அல்லது பொருத்தமில்லையா. ஹலால் சான்றிதழ் விநியோகத்தில் கையாளப்பட்ட அணுகுமுறைகள் சரியா பிழையா, இலங்கை முஸ்லிம்களது நடைமுறை அரசியல் ஒழுங்கு எப்படி அமைய வேண்டும் வட்டியில்லா வங்கிகளை ஸ்தாபிப்பதில் எதிர்நோக்கப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் யாவை? இவற்றை அமுலாக்கும் விதம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளில் அவர்களுக்கு தனியாக முடிவுகளை எடுக்க முடியாது. துறைசார் வல்லுனர்கள் தமது உதவிகளையும் ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். வேறு வார்த்தையில் கூறுவதாயின் அவர்கள் மாத்திரம் முடிவுகளை எடுக்காமல் ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும்.
அந்தவகையில் கல்வி, அரசியல், சட்டம், உளவியல். பொருளாதார முயற்சிகள், மீடியா, தொழில்நுட்பம், கலை இலக்கியம் போன்ற துறைகளில் இருப்பவர்களை உள்ளடக்கிய ஒரு மேல்சபை இலங்கை முஸ்லிம் சமூக விவகாரங்களை கையாள்வதற்கும் திட்டங்கள் வகுப்பதற்கும் அவ்வப்போது எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கு பின் தீர்வுகளாகும். இது ஒரு அபிப்பிராயம் மாத்திரமே. இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்கு அப்பால் தனித்தனியான துறைகளில் நிபுணத்துவம் கொண்ட அமைப்புக்கள் உள்ளன.
சில உதாரணங்களாவன..
1. தஃவா மற்றும் ஆன்மீக இயக்கங்கள்: தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத்கள், ஜமாஅதுஸ்ஸலமா, தரீக்காக்கள்
2. அரசசார்பற்ற சமூக சேவை அமைப்புக்கள்: வாமீ, ஷபாப், YMMA, IIRO, IRO, CIS, NIDA, FRCS, HIRA
3. முஸ்லிம் மீடியா போரம் போன்ற மீடியாத்துறைசார் அமைப்புக்கள்
4. சட்டத்துறையில் அனுபவமும் ஆற்றலுமுள்ள முஸ்லிம் நீதிபதிகள், சட்டத்தரணிகளைக் கொண்ட முஸ்லிம் சட் டத்தரணிகள் சங்கங்கள்.
5. முஸ்லிம் வைத்தியர்கள்.
6. பல்கலைக்கழங்களிலும் அரசசார் தனியார் பாடசாலைகளிலும் பணிபுரியும் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களும்.
7. விஞ்ஞான தொழிநுட்பத் துறைகள் நிபுணர்கள்
8. அரசியல் துறைசார்ந்தவர்கள்.
இவை உதாரணங்கள் மாத்திரமே. அதேவேளை அமைப்பு ரீதியாகவும் சிலர் செயல்படுவதுபோல் தனித்தனியாகவும் பலர் செயற்படுகின்றார்கள். இவர்களுக்கு மத்தியில் மார்க்க உணர்வும் சமூகப் பற்றும் பொண்ட பல்லாயிரக் கணக்கானோர் உள்ளனர். இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போது உரையாடுகையிலும் மின்னஞ்சல்களிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் போன்றவற்றிலும் வெளியிடும் கருத்துக்களைப் பார்க்கையில் அவை பயன்மிக்கவையாக அனுபவங்களின் அடியாக வெளிவருபனவையாக இருக்கின்றது. எனவே, இவர்களது அறிவு, அனுபவம் என்பனவற்றை கேட்டறிவதும் அலசி ஆராய்வதும் காலத்தின் தேவையாகும்.
அந்தவகையில், இலங்கை முஸ்லிம்களது எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுக்கவும் அவ்வப்போது எழும் சிக்கல்களை தீர்க்கவும் ஒரு மேலாண்மை மிக்க ஒரு சூரா சபை அமைக்கப்பட வேண்டும். அதற்கான பிரதிநிதிகள் நாம் மேலே கூறிய சகல அமைப்புக்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும். அந்த சபை உதாரணமாக மாதத்திற்கு ஒரு தடவை கூட்டத்தை நடத்துவதோடு சகல கண்ணோட்டங்களையும் உள்வாங்கும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் இருத்தல் அவசியமாகும். அந்தக் குழுவுக்கு 5 பேர் கொண்ட ஒரு கூட்டுத் தலைமை இருந்து முடிவுகளைப் பெறவேண்டும். இதற்கான சட்டக்கோவை தயாரிக்கப்பட்டு அதற்கமைய உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்.
இத்தகைய ஒரு ஒழுங்கமைப்புக்கு அவசரமாக நம் சமூகம் வராத போது அதிகமான பிழைகள் இடம்பெறலாம். தனி நபர்களதும் இயக்கங்களும் சுயமுடிவுகளை எடுத்து அதன்மூலம் முழு சமூகமும் பாதிப்படையலாம்.
பல அபிப்பிராயங்களின் சங்கமாக அமையும் சூரா முறைபற்றி அல்லாஹ் கூறும்போது "அவர்களது பண்பு ஆலோசனை சொல்வதாகும்' என்று ஓர் இடத்திலும் "அவர்களிடம் (நபியே) நீர் ஆலோசனை செய்வீராக என்று வேறு ஓர் இடத்திலும் கூறுகிறான். வஹி இறங்கிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் கூட தன்னை விட அறிவில் குறைந்த சகாபாக்களிடம் ஆலோசனை கேட்டார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்?
சூராவில் அல்லாஹ்வின் அருள் உண்டு. அதில் சமூகத்தின் ஏகோபித்த கருத்து பிரதிபலிக்கும். தவறுகள் குறைவாக இடம்பெறும். Collective Responsibility பொதுவான வகைகளில் இருக்கும் இதுபற்றி கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
மாஷால்லாஹ்,முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய தேவை உணரப்பட்டுள்ளது.இலங்கை வாழ் முஸ்லிம்களை ஒரே தலைமெயின் கீழ் வலுப்பெறச்செய்து வழிநடத்த உதவும்.ஆனால் இவ்வாறான விடயங்களை நடைமுறைப்படுத்த தலைமைகள் முன்வரவேண்டும்.ஒவ்வெரு ஊருக்கும் மாவட்டத்திட்கு தனியாகவும் ஜம்மியத்துல் உலமாசபை இருந்தாலும் அவற்றிற்கு இடையேயும் ACJU விற்கும் நெருக்கமான தொடர்புகள் குறைவு.அவ்வாறு இல்லாமல் மேற்குறிப்பிட்டது போல் புத்திஜீவிகளை உள்ளடக்குவதோடு ஒவ்வெரு பிரதேசத்தில் இருந்தும் பிரதிநிதிகளை உள்வாங்கி முஸ்லிம் பிரதேசங்களின் தலைமைகளை சீராக்குவதொடு முழு உம்மத்துக்குமான தலைமையை கட்டியழுப்பலாம்.இதற்கான திட்டத்தை உருவாக்குங்கள் அமுல்படுத்த இளைஞ்சர்களாகிய நாங்கள் தயார் இன்ஷாஅல்லாஹ்
ReplyDeleteIf the suggested Upper Council can help the Ameer of All ceylon Jammiyyathul Ulama to make a final decision in a certain field, it would be appreciated. And I prefer this Upper Council can work under the same roof of ACJU.
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
மேட்குறிப்பிடப்பட்டதுபோல் நமது நாட்டு முஸ்லிம்களுக்கான சூரா சபை மிகவும் அவசியமானது .ஆனால் அவை எமது பள்ளிவாயல்களை அடிப்படையாக கொண்டு அமையப்பெற்றால் மேலும் சிறப்பாக காணப்படும் . .ஏனெனில் பள்ளிவாயல் நிர்வாகிகள் என்பவர்கள் நல்ல சமூக அறிவுள்ளவர்களாகவும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்
அனுபவம் உள்ளவர்களாகவும் காணப்படுகின்றார்கள் .மேலும் இவர்கள் சமூகங்களோடு நேரடியாக தொடர்பு படுபவர்களாக காணப்படுகின்றார்கள் .எனவே ஒவ்வொரு பிரதேசங்களிலும் பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள் அமைத்து அதிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களைக்கொண்டு ஒரு மேல் சபை அமைத்தால் அது ஒரு பலமான மக்கள் சபையாக காணப்படும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும் .
Assalamu alaikum ungal idia mihawum nandru atthodu neengal enda palliwayilin nirwaahattil ulleerhal !???? Nirwaahihal alla putty ulla islamiya ariwu petra halal aha sambaatiyamudaya makkalal teyrndu edukkap Petra endru sonnal poruttamaha irukkum ean endra iway anaittum ippidu ulla aneyha nirwaahihal idattil anehamaaha illai ( mannikkawum )
DeleteMasha Allah, very good Idea...
ReplyDeleteநீங்கள் கூறும் இப்படி ஒரு சபை உலகில் எங்காவது இருக்கிறதா அல்லது வரலாறில் எந்த தேசதிலாவது இருந்ததா??? சரி இப்படி ஒரு சபையினால் மேட்கொள்ளபடும் தீர்மானங்களின் வலு யாது? அந்த தீர்மானங்களை சமூகத்தின் அணைத்து மட்டங்களும் ஏற்றுகொள்ளும் என்பது என்ன நிச்சயம்? ஒரு கல்லூரிக்கி ஒரு பல்கலைகழகதிட்கு இப்படி ஐந்து உப வேந்தர்கள் இருந்து கூட்டு முடிவு எடுக்கும் நிலை இருந்தால் அந்த கல்லூரி இயங்குமா? ஒரு பாட்சாலையில் ஒரேதரத்தில் இரு அதிபர்கள் இருந்தால் நிலமை என்ன நலவா கெடுதலா??? ஒரு குடும்பதிலேயே முடிவெடுக்கும் அதிகாரம் பலரிடம் இருந்தால் அந்த குடும்பத்தை செம்மையாக நடத்துவது எவ்வளவு கஷ்டம்? மஸூரா சபை என்பது ஒரு சபையாக இருப்பதைவிட ஒவ்வொறு காரியத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தோறுடன் அந்த துறை சார்ந்த தேவைகள் எழுகையில் மஸூராஹ் செய்வதே பொறுத்தம் இப்போது தேவை இடம் காலம் நேரம் நிலமைகேற்றாபோல் எங்கும் எபோதும் சமூகதிட்காக குரல்கொடுக்க கூடிய ஒரு ஒருங்கிணைந்த ஒரு இயக்கம் ஒரு அமைப்பு
ReplyDeleteஅந்த அமைப்பு ஒரு தலைமையின் கீழ் ஒரு கட்டுகோப்பின் கீழ் ஒரு கொள்கை கோட்பாடுடன் இயங்கும் உறுதியானதாக இருக்க வேண்டும் அதுதான் மக்களின் எதிர்பார்பு முக்கியமாக மக்களை அரசியலிலும் வழிகாட்டும் அரசியல் கழந்த அமைபாக அது இருக்க வேண்டும்!
yes ,this is good idea for our people, because we can not believe our politicians,
ReplyDeletewe have to construct immedeately
நிச்சயமாக மிகப்பபோருத்தமான சந்தர்பத்தில் நல்ல ஒரு கருத்தினை முன்வைத்துள்ளீர்கள் ACTJ என்பது பலதுரைசார் நிபுணர்களையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு என்றே நான் கருதுகின்றேன் இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டது போன்று அனைத்து துறைசார் அமைப்புக்க்களையும் அதனுடன் ஒன்றிணைப்பது காலத்தின் தேவையே. உலமாகளே தலைமைக்கு மிகப்பொருத்தமானவர்கள் என்பதனாலும் அவர்கள்களின் தீர்மானங்கள் இஸ்லாத்தினை அடிப்படையாகக்கொண்டே அமையும் என்பதனாலும் ACTJ தலைமைத்துவத்தின் கீழ் இவறன முழுமையான ஒரு கட்டமைப்பினை முன்வைத்தமைக்கு ஒரு முஸ்லிம் என்ற வகையில் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு இக்கருத்தின ACTJ நன்கு கருத்திட்கொள்ளவேண்டோடு ஏனையா அமைப்புக்களும் ACTJ வினை நாடிச்சென்று அவர்களுடன் ஒன்றிணைந்து எமது சமுதாயத்தின் நலன்கருதி அல்லாஹ்விற்காக செயற்பட வேண்டும்.
ReplyDeleteThis is an urgent and essential need
ReplyDeleteVery Very good idea we welcome this
ReplyDeleteneengal soanna uthaaarangalil islaathtin koalkaikku maarranaamana amaippuhalum unduuuuuuuuuuu
ReplyDeleteAssalamualaikum brother,
ReplyDeleteI welcome your suggestions and I could read same article already. This is unavoidable in this situation. A Soora must be established very soon and ACJU must consider this matter please.
faleel sir arumaiyana alosani allah vettiyai tharuvaan.
ReplyDeleteஇது காலத்தின் தேவையறிந்து விடுக்கப் பட்ட ஆலோசனை என்பதில்
ReplyDeleteசந்தேகமில்லை.முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களின் மீதும்
ஆன்மீக தலைமைத்துவத்தின் மீதும் இலங்கை முஸ்லிம்கள் நம்பிக் கையிழந்த நிலையில்,மேல் சபை அல்லது சூரா கொன்சிலின் தேவை
இன்றியமையாததாகும்.மாவட்டங்கள் தோறும்அமைக்கப் படும் சூரா சபைகள்,தேசிய ரீதியாக ஒன்றிணைக்கப் பட்டு,முஸ்லிம்களுக்கான
தேசிய தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.மாத்தளையிலும் அதற்கான அத்திபாரம் 2013பெப்,17திகதியும்,துரைசார் நிபுனர்களுட
னான கருத்தாடல் 2013மார்ச்03ம்திகதியும் நடைப் பெற்றது.இன்ஷா
அல்லாஹ் முயற்சிகள் தொடரும்.
in current situation advice board is must but (All CJU)will they cosider about this matter to do an immediate action.
ReplyDeleteWonderful idea,With Allah's help, you have our support every Action.
ReplyDeleteஇக்காலத்திற்கு மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருத்தமான சிறந்த ஆலோசனை.. இதை ஏதாவது ஒரு எமது சமூகத்தை பற்றி சிந்திக்கின்ற பொது அமைப்பு முன் நின்று ஆரம்பியுங்கள்.. அதற்கான பொது அழைப்புகளை ஊடக வாயிலாகவும் பல் துறை தேர்ச்சியாளர்களை நேரடியாகவும் அழைத்து விரைவில் நடை முறைப்படுத்த்துங்கள்.. குழப்பவாதிகள் பகிரங்கமாக செயற்படும் போது சமூக நலன் காக்க செயற்பட முடியாதா??? இதில் பங்கு பற்ற முடியாத அமைப்புகளையும் , தலைவர்களையும் புறக்கனிப்போம்..
ReplyDeleteமிக அவசரமாக மிக அவசியமாகத் தேவைப்பம் விடயம். ஆனால் இதை மோசமான அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டுமே? அரசியலும் இஸ்லாம்தான். தூய்மையான எண்ணம் இருந்தால் அல்லா போதுமானவன்.
ReplyDeleteஇதற்குச் சமாந்தரமாக ஒவ்வொரு ஊரிலும் துறைசார் நிபுணர்களை இணைத்து சூரா சபைகளை அமைத்தால் இன்ஷா அல்லா இன்னும் நலவான முடிவுகள் ஏற்படும்
இதில் நிறைய பேசுவதற்கில்லை காலத்துக்குப் பொருத்தமான யோசனை யார் மணி கட்டுவது அவசரமான தற்போதுள்ள முஸ்லிம் கவுன்ஸிலே இதனை முன்னெடுத்து ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அனைத்து இயக்கங்களையும் அழைத்து ஆலோசித்து அடுத்த கட்ட நகா்வுக்குச் செல்லலாமே
ReplyDeleteஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முஸ்லிம் சமூகம் அணைத்து வேறுபாட்டையும் ஓரங்கட்டிவிட்டு அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் போல் கைகோர்த்து நிற்பதோடு இவ்வாறானதொரு சூரா சபை ஒன்றை இயக்க வித்தியாசம் இன்றி அனைவரையும் உள்ளடக்கியதாக சற்றும் தாமதியாது உருவாக்கி முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துவது இன்றைய காலத்தின் சூழ்நிலையின் தேவை . தயவு செய்து இப்படியதொரு சபையை வெகு விரைவில் உருவாக்கவும்
ReplyDeleteஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முஸ்லிம் சமூகம் அணைத்து வேறுபாட்டையும் ஓரங்கட்டிவிட்டு அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் போல் கைகோர்த்து நிற்பதோடு இவ்வாறானதொரு சூரா சபை ஒன்றை இயக்க வித்தியாசம் இன்றி அனைவரையும் உள்ளடக்கியதாக சற்றும் தாமதியாது உருவாக்கி முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துவது இன்றைய காலத்தின் சூழ்நிலையின் தேவை . தயவு செய்து இப்படியதொரு சபையை வெகு விரைவில் உருவாக்கவும்
ReplyDelete