Header Ads



'ஊடகப்பணியை இபாதத்தாக மதிப்பவனே உண்மையான முஸ்லிம் ஊடகவியளாளன்'


ஊடகப் பணி என்பது புனிதமானதாகும்.இதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப் படுகின்றது. மக்களது தகவல் அறியும் உரிமை பேனப்படுகிறது. மக்களது அறிவு மட்டம் இதன் மூலம் உயர்கிறது.இன்றைய சமூகம் நாளைய சூழலுக்கு ஏற்ப தயார் பன்னப்படுகின்றது. இஸ்லாம் இத்தகைய ஊடகப் பணியை உயர்வாக மதிக்கின்றது.

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சிங்கள மொழியில் கல்வி பயிலுகின்ற முஸ்லிம் மாணவர் மாணவியர்களுக்கான  சிங்கள மொழிப் பத்திரிகை தொடர்பான  பயிற்சிச் செயலமர்வு குருநாகலையில் 17-03-2012 நடைபெற்றது.  இந்நிகழ்வில் சிறப்புரையாற்றி உண்மை உதயம் சஞ்சிகை ஆசிரியர் அஷ்ஷெஹ் எஸ். எச். எம். இஸ்மாயில் (ஸலபி) உரையாற்றுகையில்

ஊடகப் பணி என்பது புனிதமானதாகும்.இதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப் படுகின்றது.மக்களது தகவல் அறியும் உரிமை பேனப் படுகிறது.மக்களது அறிவு மட்டம் இதன் மூலம் உயர்கிறது.இன்றைய சமூகம் நாளைய சூழலுக்கு ஏற்ப தயார் பன்னப்படுகின்றது.இஸ்லாம் இத்தகைய ஊடகப் பணியை உயர்வாக மதிக்கின்றது.

சுலைமான் நபி தனது பட்டாளத்துடன் வந்துகொண்டிருக்கிறார். அப்போது ஒரு எறும்பு மற்ற எறும்புகளைப் பார்த்து உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். சுலைமான் நபியின் பட்டாளம் வந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறது இதுபற்றி குர்ஆன் 26:28ல்     கூறப்படுகிறது. ஒரு எறும்பு தகவல் ஒன்றை அறிந்து அதை அடுத்தவர்களுக்கு எடுத்துக் கூறிய ஊடகப் பணி மூலமாக தனது சமூகத்தபை பாதுகாத்துள்ளது. இதன் மூலம் ஊடகப் பணியின் சிறப்பை அறியலாம்.

இன்றைய ஊடகங்களில் பல சமூக சீரழிவுளை உருவாக்கி வருகின்றன. ஒருவன் இறந்து கொண்டிருந்தால் அதை எப்படி தத்ரூபமாகக் காட்சிப்படுத்தலாம் என்றுதான் ஊடகவியளாளன் நினைக்கின்றான்.அவனைக் காப்பாற்ற வேண்டும் என அவன் நினைப்பதில்லை. இஸ்லாமிய ஊடகப்பணி என்பது மனிதாபிமானத்தையும் மனித நேயத்தையும் முதன்மைப் படுத்துவதாக இருக்க வேண்டும்.

அடுத்தவர்களைவிட நாமே தகவலை முதலில் வெளியிட வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை செய்தியை உறுதிப்படுத்துவதில் காட்டுவதில்லை உங்களிடம் ஒரு செய்தி வந்தால் அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என குர்ஆன் (49: 6) கூறுவதை முஸ்லிம் ஊடகவியளாளர்கள் மறந்து விடக் கூடாது.

செய்தியை வெளியிடும் போது அதில் நீதி நேர்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். 'நீங்கள் கூறினால் நீதமாகவே கூறுங்கள்'(6:152) என குர்ஆன் கூறுகிறது. செய்தியின் உண்மைத் தன்மை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் காதல் கேட்பதையெல்லாம் ஒருவன் பேசுவதே அவன் பொய்யனாக இருக்கப் போதியதாகும். (முஸ்லிம்) என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு முஸ்லிம் ஊடகவியளாளன் பக்க சார்பான தகவல்களை வெளியிடுபவனாகவோ இன மத குரோதத்திற்கு தூபமிடுபவனாகவோ தீய செய்திகளைப் பரப்புகிறவனாகவோ இருக்க முடியாது.ஊடகப்பணியை இபாதத்தாக மதித்து அதில் தூய்மையைக் கடைப்பிடிப்பவனே உண்மையான முஸ்லிம் ஊடகவியளாளனாவான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.