Header Ads



பொதுபல சேனாவை இயக்குவது கோட்டபய ராஜபக்ஷதான் - சரத் பொன்சேக்கா தெரிவிப்பு


பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளுக்குப் பின்னணியில் இந்த அராசாங்கம் பக்கபலமாக இருக்கிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழேயே பொதுபல சேனா அமைப்பு இயங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் 01-03-2013 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிய ஜனாதிபதி நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் சில அமைப்புகளின் பின்னணியிலும் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு அப்போது ஆதரவு வழங்கிய கலபொட ஹத்தே ஞானசார தேரர் தற்போது பொதுபல சேனாவின் செயலாளராக உள்ளதாகவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட முஸ்லிம்  அமைப்பினர் தெரிவித்தனர். இது தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,

பொதுபல சேனா அமைப்பு கடந்த பத்து மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பொழுது அவ்வமைப்பு தனது  முதல் மாநாட்டினை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான சகல வசதிகளையும் நிதியுதவிகளையும் பாதுகாப்பு அமைச்சு உட்பட அரசாங்கம் வழங்கியிருந்தது.

தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் தீவிர மதவாத  போக்குடைய பொதுபல சேனா அமைப்பின் அனைத்து செயற்பாடுகளின் பின்னணியிலும் அரசியல் சக்திகள் காணப்படுவதென்ற ஜனாதிபதியின் கருத்தினை நான் ஒப்புக் கொள்கிறேன்.  அந்த சக்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவும் விரும்புகின்றேன். 

நாட்டில் புதிதாகத் தோன்றியுள்ள மதவாதப் பிரச்சினைக்கு கர்த்தாவாக திகழ்வது இந்த அரசாங்கமே. மதங்களுக்கிடையிலோ அல்லது இனங்களுக்கிடையிலோ பிரச்சனை ஏற்படும் பொழுது அதனை உடனடியாகப் பேசித் தீர்வு காண வேண்டும். இல்லையேல்  கடந்த காலத்தில் நாம் சந்தித்த பின்னடைவை மீண்டும் சந்திக்க நேரிடுமெனத் தெரிவித்தார். 

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகா என்ற தனி நபருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய பிக்கு முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன. தற்போது எனக்கு எந்தவொரு கட்சியின் ஆதரவும் கிடையாது. அவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி மறைமுகமாக என்னைக் குற்றஞ்சாட்டுவது வேடிக்கையாகவே உள்ளதெனவும் தெரிவித்தார். 

இது தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட ஹத்தே ஞான சார தேரரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறுகையில் ; 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் யுத்த வெற்றிக்கு காரணமாக இருந்த இராணுவ வீரர்களை எண்ணி, நான் முன்னாள் இராணுவ தளபதி  சரத் பொன்சேகாவுக்கு சமய ரீதியான சில உதவிகளை செய்து வந்தேன். அதை விட  எனக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

5 comments:

  1. இவர்கள் இருவரும் முஸ்லிம்களை ( சிறுபான்மை இனங்களை ) பொருத்தவரை ஒரே கருத்தை கொண்டவர்கள் தான்... காலத்தின் நேரம் இவர்கள் இருவரும் எதிரிகலாயுள்ளனர். இந்த ராஜபக்ச அன் கம்பனியின் கடந்தகால அனைத்து நடவெடிக்கைகளும் நம்ப வைத்து கவிழ்த்து விடுவார்கள். முக்கியமாக சிறு பான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்றுவது எல்லா மக்களினதும் கடமையாகும். முக்கியமாக சிறுபான்மை மக்களின் தலையாய கடமையாகும்.

    ReplyDelete
  2. இதை கோத்தவே ஒத்துகொண்டதுதானே, "பொது பல சேனா ஒரு உயர்ந்த பௌத்த நோக்கத்தித்ட்காக ஆரம்பித்தோம்" என்று, ஆனால் அந்த உயர்ந்த நோக்கம் என்ன என்பதை மனுசன் சொல்லவில்லை.எது எப்படியோ எமது சிவில் சமூகங்கள் விழித்துக்கொள்ளாதவரை அரசியல் வாதிகளை பேசுவது நம்மை நாமே ஏமாற்றிகொள்வதுதான். 5 வருடங்களுக்கு நாம் அவர்களுக்கு தேவை இல்லை, அப்புறம் இருக்கவே இருக்கிறது " 1000 விளக்குடன்.....

    ReplyDelete
  3. அட போங்கடா நீங்கள் எல்லோருமே எங்களின் எதிரிகள் என்பதில் எல்லளவு கூட மக்களாகிய எங்களுக்கு சந்தேகமில்லை.1982 முதல் நாட்டில் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். எங்களின் பொறுமையை நாம் பதுங்குகிறோம் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். பயப்படுகிறோம் என்று நினைத்து விடாதீர்கள்

    ReplyDelete
  4. Well sid General, Mr. Ghotapaya started his carrier by grabbing Muslims money, lands then business and he is pretending as very good person in front of everyone as a “Apple of the Eye”
    He should forget the past, he knows very well who helped his government when they were in deep trouble and he should not forget also with the help of Gulf, Arab and Muslim Nations he is running his government and developing Sri Lanka.
    Sri Lankan Muslims are known as “ Mah Rak Kalay” means “He Saved me / He saved my Life” said by a Sinhala King! So please Mr. Ghotapaya, Live and let Live Others peacefully.

    ReplyDelete
  5. யாரு எதப்பத்தி எதைச் சொல்ரதெண்டு வெவஸ்தை இல்லாமப் போச்சுப்பா....

    ReplyDelete

Powered by Blogger.