ஒரு அறிக்கை விடுவதற்குக்கூட முஸ்லிம் கட்சிகள் கோழைகளாக இருக்கின்றார்கள்
மன்னம்பிட்டியில் அபாயா அணிந்திருந்த முஸ்லிம் பெண் தாக்கப்பட்டதை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இதற்குரிய முழு பொறுப்பையும் உலமா சபையின் தற்போதைய நிர்வாகமும், அரசுக்கு ஆதரவு தரும் முஸ்லிம் உறுப்பினர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
ஹலாலை விட்டுக்கொடுத்தால் ஏனைய அனைத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டி வரும் என நாம் ஏற்கனவே எச்சரித்திருந்தோம். அதனையும் மீறி அவசரக்குடுக்கையாய் அதனை விட்டுக்கொடுத்ததால் இறுமாப்பு கொண்ட சிங்கள பேரினவாதம் இன்று முஸ்லிம் பெண்ணின் ஆடையில் கைவைத்துள்ளது. ஹலால் விடயத்தில் உலமா சபையும், அரசுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளும்; தீர்மானமிக்க செயற்பாட்டில் இருந்திருந்தால் இத்தகைய நிலை இத்தனை சீக்கிரம் வந்திருக்காது.
பெண்களின் அபாயாவுக்கு ஆபத்து வந்தால் உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்குவோம் என கூறும் பெண் அரசியல்வாதிகள் இப்போது மன்னம்பிட்டியில் அபாயா அணிந்த பெண் அவமானப்படுத்தப்பட்டுள்ளதை எதிர்க்கு முகமாக குறைந்தது அரசுக்கு ஆதரவு வழங்கி பாராளுமன்றில் மௌன விரதம் கடைப்பிடிக்கும் தமது தலைவரை பகிரங்கமாக கண்டிக்க முன்வரவேண்டும் அல்லது தமது தலைமையின் பிரசன்னத்துடன் ஆர்ப்பாட்டமாவது செய்ய வேண்டும்.
பௌத்த சீருடை அணிந்த தேரர்கள் தமிழ் நாட்டில் தாக்கப்பட்டதற்காக ஜாதிக ஹெல உறுமய பகிரங்கமாக கண்டித்துள்ளது. ஆனால் இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் பெண் தான் விரும்பும் ஆடையை அணிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அபாயா அணிந்த பெண் தாக்கப்பட்டமையை கண்டிக்க பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் முன் வரவேண்டும். அறிக்கை விடுவதை சாதாரணமானதாக நினைப்பவர்கள் குறைந்தது இது விடயங்களில் அரசின் பொடுபோக்கை கண்டித்து ஒரு அறிக்கை விடுவதற்குக்கூட அச்சப்பட்ட கோழைகளாக இருக்கின்றார்கள் என்றால் அறிக்கை விடுதல் என்பது சாதாரண விடயம் அல்ல என்பது தெளிவாகிறது.
ஒரு காலத்தில் பேரின கட்சிகளில் இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்களால் சுதந்திரமாக சமூகத்துக்காக குரல் எழுப்ப முடியாது என்பதனால்த்தான் நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை கட்டி எழுப்பினோம். இன்று அதை விட கேவலாமான நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சுயநல ஆசைகளும் பதவி வெறியும், ஏமாற்று அரசியல்வாதிகளின் மோசடிகளுக்கு சோரம் போன பொது மக்களுமாகும். இத்தகைய ஏமாற்றுக்கட்சிகளால் முஸ்லிம் சமூகம் பெற்ற நன்மையை விட தீமைகளே மிக அதிகம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
இந்த அறிக்கை உட்றத உட்டுப்போட்டு! புத்திசாலித்தனமா ஏதாவது செய்ய பாருங்கோ! (இல்லாதத்த செய்யச் சொல்ரேனோ?)
ReplyDeleteநங்கூர தாடி வைத்துக்கொண்டால் நல்லவர் என்று பொருளாகாது!
அறிக்கை விடுவது ஆத்தாதவன் வேலை! அதை நீங்கள் செய்கிறீர்கள் சரியாகத்தான் இருக்கிறது!
உங்களுக்கும் ஒரு அமைச்சுப் பதவியை இவ்வரசு தந்தால் நீங்கள் இப்போதிருப்பவர்களுக்குப் போட்டியாக டபிள், ட்ரிப்ள் பல்டி அடிப்பீர்கள்!
நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் ஐஸ்கிரீமுக்கு அழும் குழந்தைபோல் இருக்கிறது!
அரசியல் செய்யுங்கள் ஆதாயம் பெறுங்கள், அது உங்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் முஸ்லிம் என்ற லேபல்களைப் போட்டுக்கொண்டு, இஸ்லாமியம் காக்கப் புறப்பட்டவர்போல் நடந்து கொள்வதையோ! பேசுவதையோ! எழுதுவதையோ! ஜீரணிக்க முடியவில்லை. உங்கள் மதனி! கபூரி! எல்லாம் பண்டப்பொருள்கள் பெயர்கள் போலாகிவிட்டன!
முஸ்லிம் அரசியல் வாதிகளே! எப்போது தணியும் இந்தப் பதவி தாகம்? எப்போது விடியும்? யாரால் விலகும் எம்மைச் சூந்த இருள்?
Dear Brother! Muslim Congress now consists only members who don't have backbones, useless fellows. It is no use expecting SLMC do something better for Muslim Community. Time has come to form a new party for Us.
ReplyDeleteகிழக்கான் ஈஸ்ட், மிகச் சரியாக கூறினீர்கள். யதார்த்தமான விமர்சனம்.. நன்றி
ReplyDelete