Header Ads



தலிபான்களுக்கு உதவிய துருக்கி பெண்ணுக்கு அமெரிக்காவில் சிறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓய்டுன் ஐஸே மிகளிக் வாழ்ந்து வந்தார். துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். இவர் 2010-ம் வருட இறுதியிலும், 2011-ம் ஆண்டு தொடக்கத்திலும் 3 முறை பாகிஸ்தானுக்கு இணையம் மூலம் 2050 அமெரிக்க டாலர்கள் அனுப்பியது தெரிய வந்தது. 

இதனால் பாகிஸ்தானில் உள்ள அமைப்புக்கு பணம் வழங்கியதாக குற்றம் சாட்டி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளையும் பிற அமெரிக்கர்களையும் தாக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கதுடன் இவர் பாகிஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டார். 

இதனை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 

1 comment:

  1. தலிபான்களுக்கு உதவியதற்காக ஐந்து வருட சிறை...
    தலிபான்களை உருவாக்கிய அமெரிக்க அரசாங்கத்துக்கு என்ன தண்டனை...
    அவர்களை வழி நடாத்திய பாகிஸ்தான் ISIக்கு என்ன தண்டனை...
    அவர்களுக்கு நிதியுதவியளித்த சவூதிக்கு என்ன தண்டனை...

    ReplyDelete

Powered by Blogger.