இன்றைய தேவை முஸ்லிம் கூட்டமைப்பு..!
(அபூ அல்தாபி)
அரசியல் யாப்புரீதியாகவும்,ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சாசனத்தின் அடிப்படையிலும் ஒவ்வொரு மனிதனும் தாம் விரும்பிய சமயத்தைப் பின்பற்றவும்,தம் கலாசாரத்தைப்பேணி நடக்கவும் ;பூரண உரிமையைப்பெறுகிறான்.சிறுபான்மை மக்களைப்பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு அரசின்மீதும் சுமத்தப்பட்டுள்ளது.இக்கடமையில் இருந்து அரசுகள் தவறிவிடும்போது சர்வதேசத்தலையீடு அங்கே நுழைய வாய்ப்பு ஏற்படுகிறது.
ஒரு காலத்தில் அதியுயர் சபையான பாராளுமன்ற சபாநாயகர் பதவி முஸ்லிம் ஒருவருக்கே வழங்கப்பட்டு வந்துள்ளது. இது ஆட்சியாளர்களால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு கௌரவமாகவே கருதப்பட்டது.இன்று அந்த நிலை மாற்றமடைந்துள்ளது.முன்னாள் சபாநாயகர்கள் மர்ஹும் இஸ்மாயில் அவர்கள்,மர்ஹும் பாக்கீர்மாக்கார் அவர்கள்,எம்.எச்.முஹம்மட் அவர்கள்.
நிதியமைச்சராக மர்ஹும் நெய்னாமரைக்கார் அவர்களும்,கல்வியமைச்சராக மர்ஹும் பதியுதீன் அவர்களும்,வெளிவிவகார அமைச்சராக மர்ஹும் ஏ.சி.எஸ்.ஹமீட் அவர்களும் புனர்வாழ்வு துறைமுகங்கள் அமைச்சராக எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களும்.முஸ்லிம் கலாசார அமைச்சு செயற்பட்ட காலம் போன்றவற்றைப் பின்னோக்கிப் பார்க்கும் போது மீண்டும் முஸ்லிம்கட்கு அப்படியொரு கௌரவம் கிடைக்குமா? கிடைக்க அடிப்படைவாத இனவாதிகள் விடுவார்களா?
இப்போதெல்லாம் முஸ்லிம் ஒருவருக்கு சிறந்த சேவை செய்யக்கூடிய, அதிக தொழில் வாய்ப்புக்கொடுக்கக் கூடிய ஒரு அமைச்சு கிடைப்பது என்பது முயல் கொம்பாகவேயுள்ளது. இதற்கு யார் காரணம்.ஏன் ? முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள்.அன்னியர்களின் படையெடுப்பின் போது தோளோடு தோளாக நின்று போராடியமைக்காகவா? ஆல்லது கள்ளிக்கோட்டையிலிருந்து முஸ்லிம் படையுதவியைப் பெற்றுக்கொடுத்தமைக்காகவா?சுதந்திரம் வழங்கப்பட்டபோது 50 + 50 கோராமல் பெரும்பான்மையினரோடு நின்றமைக்கான பரிசா?
என்று எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் தனித்தனியாக சுயலாபங்களுக்காக பிரிந்து சென்றார்களோ,என்று முஸ்லிம் கட்சிகள் பல பல பிரிவுகளாக செயற்படத்தொடங்கினதோ அன்றிலிருந்து எமது பலமும் சிதைந்தது.அரசுகளும் எமது பலவீனத்தைப் புரிந்து கொண்டு மிகவும் சிறப்பாகக் காய்களை நகர்த்திக்கொள்கின்றன.
ஆட்சிக்கே வரமுடியாமல் எதிர்க்கட்சியில் இருந்துவந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆட்சியைப்பிடித்துக்கொடுத்தோர்.முஸ்லிம்கள் என்ற வரலாறு இன்று மறக்கப்பட்டுள்ளது .இழந்த எமது பலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் முஸ்லிம் கூட்டமைப்பு உடனடியாக உருவாக்கப்படவேண்டும்.
சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. இதேபோன்று நாம் எதிர்காலத்தில் நடந்து கொள்வோமாக.
ஆசாத் சாலி,முஜிபுர்ரஹ்மான் ,ரணில்விக்ரமசிங்க, மங்களசமரவீர, மனோகணேசன், சம்மந்தன் ,போன்றோர் , எமது முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கும்போது,அரசுடன் இருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் உள்ளன. அரசுக்குள் இருந்து கொண்டே அரசை விமர்சிப்பது கூட்டுப்பொறுப்பை மீறுவதாக அமையும்.
இலங்கைத்தமிழ் மக்களுக்காக இந்திய மத்திய அரசில் இருந்து வெளியேறிய தி.மு.கா இன் தியாகம் பெரியது.மத்திய அரசில் தனக்கிருந்த அமைச்சுக்களையே தூக்கி எறிவதென்றால் சாதாரண ஒரு விடயமல்ல.அவர்களால் அப்படிச் செய்யமுடியுமென்றால். ஏன்? எம்மால் முடியாது.கட்சியா? சுமூகமா?பதவிகளா? இதற்கான பதில்களை விரைவில் காணுங்கள்.
தெயட்ட கிருல நிகழ்வின்போதும்,அண்மைய ஹர்த்தாலின் போதும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசின்பக்கம்,ஆனால் முஸ்லிம் மக்கள் அரசின் பக்கம் இல்லையென்ற பலமான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.இது மிகவும் பாரதுரமானது எதுவெல்லாம் செய்தால் முஸ்ல்pம்களின் மனம் அதிகம் பாதிக்கப்படுமோ அதையெல்லாம் செய்து முடித்துவிட்டனர்.இனவாதிகள்.இப்போது முஸ்லிம்களுக்குத் தேவை நாசக்கரமா? நேசக்கரமா? சிந்தியுங்கள்.
The 'King Makers' will decide an answer for this urgent question,
ReplyDeleteafter viewing the discussion and outcome of todays meeting
of H.E. President with our politicians.
தேவை! பொறுத்திருந்து பார்ப்போம்!!!!!!!!!!!!!!!
ReplyDeleteகூட்டுறவு ஒரு இன்றியமையாத தேவை ஆனால்,
இவர்கள் கூட்டுறவில் நம்பிக்கையை விட அவநம்பிக்கையே எங்களுக்கு மனதில் முதல் உதிக்கிறது. அந்த அளவு எங்கள் நம்பிக்கைகளை தொடர்ந்து நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் மேடைப் பேச்சுக்களையும் மீட்டிப்பார்த்தல். சிரிக்க மட்டுமே தோன்றும்.
இப்போது இவர்கள் எதோ ஒரு கூட்டுறவில் இருப்பதான மாயையில் நாமிருக்கிறோம். அரசியல் ஞானம் அறவே இல்லாதவர்கள், எல்லோரையும் போல, முஸ்லிம்களான இவர்களும் காபிர்தனமான அரசியல் செய்வதால் நம்பகத்தன்மை நாளுக்குநாள் அழிந்து வருகிறது.
தன் சுகபோகமும், பதவியும், அதிகாரமும், டாம்பீகமும் போய்விடும் என்ற ஒரு நிலை வந்தால் மட்டும் கூட்டுறவு வைப்பார்கள் எல்லாம் மீண்டும் பெற்றபின் கூடு கலைப்பார்கள்.
இவர்கள் ஒருவருக்கொருவர் மேடைகளில் திட்டித் தீர்த்தவைகளை நினைத்துப் பார்த்தாலே இவர்கள் ஒன்றுசேரும் வாய்ப்புக்கு வழியே இல்லை என உணர்வீர்கள்.
இப்போதுதான் ஹகீம் வாய் திறக்கிறார் –
ஏன் திறந்தார்?
யார் திறக்கச் சொன்னார்?
முன்பில்லாத இந்த தைரியம் சட்டென எப்படி வந்தது?
முஸ்லிம்களின் கொந்தளிப்பைத் தணியச் செய்ய அரசே இவரை இப்படிச் சொல்லச் சொன்னதா?
அதற்காகத்தான் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் (குறிப்பாக வடக்கு, கிழக்கு எம்பிக்கள்) அமைதி காக்கின்றனரா? (அரசு சொன்னதால்)
இப்படிப் பல கேள்விகளை எம் அனுபவம் முன்வைக்கிறது.
ஹக்கீம் சொன்னார்: இது சம்மந்தமாக அதாஉல்லாஹ் உடனும், றிஷாத் பதியுட்டீனுடம் பேசி இருக்கிறேன் என்று! இங்கேதான் நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம்.
சந்தோஷத்தில் அல்ல பயத்தில். இதற்குப்பின்னான பின்விளைவுகள் என்னவாக இருக்குமோ என்ற பீதிதான்.
இன்னும் இவர்கள் யாரும் ஆக்கபூர்வமான எந்த ஒரு அரசியல் ரீதியான, தூரநோக்குள்ள, தேசியம் சம்மந்தமான முயற்சியோ, முச்தீபோ எடுக்கவில்லை அதற்கான பயிற்ச்சியும் இவர்களிடத்தில் இல்லை.
கொஞ்சம் இருந்து பார்போம்!
சில வேளை மக்களின் துஆக்கள் பலித்திருக்கலாம்.
Yes,we want a aliance with tamil people otherwise we can't get our rights in this country
ReplyDelete