Header Ads



ஒலுவில் கடற்பரப்பில் 97 பேர் கைது


சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒலுவில் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 39 ஆண்களும், 18 பெண்களும் உள்ளடங்குவதுடன், 40 சிறுவர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம், சிலாபம், நிர்கொழும்பு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படகில் பயணித்த அனைவரும் தற்போது ஒலுவில் துறைமுக கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழர்களும் - முஸ்லிம்களுமே அதிகளவில் உள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் கைக்குழந்தைகளும், சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.  

1 comment:

  1. ஒருமாதகாலத்திற்கு முன்னதாக ஒலுவிலை அண்மித்த பகுதிலுள்ள குடும்பமொன்று தாய்,தகப்பன்,குழந்தை மூவரும் இதுபோன்ற பயணமொன்றில் தாய் மரணித்த சம்பவம் நடந்தது. இதுபோன்ற கஸ்டகரமான பயணங்களில் அதுவும் குழந்தைகளுடன் செல்வத்ற்கு முயற்சிப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.