Header Ads



பங்களாதேஷில் வன்முறை தீவிரமாகிறது - 83 க்கும் மேற்பட்டோர் மரணம்



வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் துணைத் தலைவரும், இஸ்லாமிய தீப்பொறி பேச்சாளருமான தல்வார் ஹூசைன் சயீதி (73) மீது, 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின் போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக வழக்குகள் தொடரப்பட்டது. 

இதில் பன்னாட்டு நடுவர் நீதிமன்றம் சயீதி உள்பட மூவருக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேசம் முழுவதும்  ஜமாத்-இ-இஸ்லாமியக் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்திய ஜனாதிபதியின் 3 நாள் பயணத்தில் போதும் சயிதீயின் ஆதரவாளர்கள் முழு அடைப்பு அறிவித்திருந்தனர். நேற்று நடந்த போராட்டங்களின் போது இரு வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. கடுங்கோபம் கொண்ட சயீதின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், அரசின் ஆதரவாளர்களின் வீடுகள் ஆகியவற்றை தாக்கி தீக்கிரையாக்கினர். 

சத்கிரா மாவட்டத்தில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டனர். சிரஜ்காணி மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. 

பலர் காயமடைந்துள்ளனர். கலவரங்களின் போது டாக்காவின் முக்கிய ரெயில் நிலையத்தில் இரண்டு ரெயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், பெட்டிகள் காலியாக இருந்ததால் உயிரிழப்புகள் நிகழவில்லை என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 

இந்த போராட்டம், வன்முறை 5-வது நாளாக நீடிக்கிறது. இன்றும் பலர் கொல்லப்பட்டனர். இதன்மூலம் கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. 

No comments

Powered by Blogger.