முஹம்மது முர்ஸி மன்மோகன் சிங்குடன் 7 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்
இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் முஹம்மது மோர்சி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இந்தியா-எகிப்து நட்புறவை பலப்படுத்தும் வகையில் நேற்று 7 புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கை கண்ணியத்திற்குரிய சகோதரர் என வர்ணித்த மோர்சி, இந்தியாவுடன் அனைத்து துறைகளிலும் எகிப்து ஒன்றிணைந்து செயலாற்றும் என கூறினார்.
நதிக்கரைகளை உலக பொருளாதார மண்டலமாக தரம் உயர்த்தும் எகிப்து அரசின் புதிய திட்டத்தின்படி, அந்நாட்டில் உள்ள 200 கி.மீட்டர் நீள சூயெஸ் கால்வாய் புணரமைப்பு திட்டத்தில் பங்கேற்க வரும்படி இந்திய நிறுவனங்களுக்கு மோர்சி அழைப்பு விடுத்தார்.
Post a Comment