Header Ads



சர்வதேச மோசடிகள் - இலங்கைக்கு 79 ஆவது இடம்


சர்வதேச மோசடிகள் மற்றும் புலனறிவு சுட்டெண்ணுக்கு அமைய இலங்கை 79ஆவது இடத்தினை பெற்றுள்ளது. கடந்த வருட அறிக்கையுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஏழு இடங்கள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட அறிக்கைக்கு அமைய சர்வதேச மோசடிகள் மற்றும் புலனறிவு சுட்டெணக்கு அமைய இலங்கை 86ஆவது இடத்தில் இருந்தது.

சர்வதேச மோசடிகள் மற்றும் புலனறிவு சுடடெண்ணுக்கு அமைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை விடவும் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.

குறித்த அறிக்கைக்கு அமைய இந்தியா 94அவது இடத்தினையும் பாகிஸ்தான் 139ஆவது இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளன.

சர்வதேச மோசடிகள் மற்றும் புலனறிவு சுட்டெண்ணுக்கு அமைய மோசடிகள் குறைந்த நாடாக டென்மார்க் முதலிடத்திலும் நியுசிலாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

இந்த அறிக்கைக்கு அமைய மோசடிகள் அதிகளவில் இடம்பெறும் நாடாக 174 ஆவது இடத்தில் சோமாலியா உள்ளமை குறிப்பிடத்தக்கது. Nf

1 comment:

  1. நமது நாடு எவ்வளவு அழகானதும் நாட்டுமக்கள் எவ்வளவு பண்பானவர்களாகவும் இருக்கின்றார்கள் தற்போதைய அரசாங்கத்தின் குடும்பத்தினரின் செயற்பாட்டினாலும் அவர்களின் போக்காலும் இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகின்றது. நாட்டில் உள்ள வளங்களையெல்லாம் இக்குடும்பத்தினர் தமக்குள்ளேயே வளைத்துப்போடும் குறியிலேயே இருக்கின்றனர்

    ReplyDelete

Powered by Blogger.