பல் மருத்துவரிடம் சிகிச்சைபெற்ற 7000 பேருக்கு எயிட்ஸ் சோதனை
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தில் உள்ள துல்சா புறநகர்ப் பகுதியில் கடந்த 35 வருடங்களாக பல் மருத்துவராக இருந்து வந்தவர் டாக்டர் டபிள்யூ. ஸ்காட் ஹாரிங்க்டன் ஆவார்.
சமீபத்தில், இவருடைய மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு 'ஹெபடைடிஸ் சி' நோய்த்தொற்றின் தாக்கம் வருவதாகத் தெரியவந்ததை அடுத்து, சுகாதாரப் புலனாய்வு அதிகாரிகள் இம்மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
அப்போது, டாக்டர் ஸ்காட் மருத்துவத் தகுதியே இல்லாத பலரை வேலையில் அமர்த்தியிருந்தது தெரியவந்தது. பதிவு செய்த ஒரு மருத்துவர் செய்யவேண்டிய அனைத்து வேலைகளையும் அந்தப் பணியாளர்கள் செய்திருக்கின்றனர். காலக்கெடு முடிந்த மருந்துகள், சுத்தம் செய்யப்படாத ஊசிகள், அனுமதி இல்லாமல் உபயோகிக்கப்பட்ட மயக்க மருந்துகள் என இவற்றைப் பார்த்ததும் அந்த ஆய்வாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஸ்காட் இதுபோல் செய்தது தெரியவந்தது. அந்த காலகட்டத்தில் அங்கு வந்து சிகிச்சை பெற்ற சுமார் 7000 பேருக்கும், அரசு செலவில் இலவசமாக எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் போன்ற சோதனைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு நடந்த இரண்டு நாட்களில், மார்ச் 20-ம் தேதியன்று ஸ்காட் தனது மருத்துவ பணி அனுமதிச் சான்றையும், மருந்துகள் அளிப்பதற்கான ஒப்புதல் நகலையும் அரசு அதிகாரிகள் வசம் ஒப்படைத்துள்ளார்.
Post a Comment