சவூதி அரேபியாவில் 7 பேருக்கான மரணதண்டனை நிறைவேற்றம் ஒத்திவைப்பு
bbc சவுதி அரேபியாவில் கொள்ளையடித்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மீதான தண்டனை நிறைவேற்றம் சவுதி அதிகாரிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த சமயம் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பால்ய வயதுடையவராகவே இருந்தார்கள்.
தண்டனை நிறைவேற்றம் ஏன் தள்ளிப்போடப்பட்டது என்பது தொடர்பில் முரணான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இனி எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்பதற்கும் அறிகுறிகள் இல்லை.
மரண தண்டனையை எதிர்த்து வரும் மனித உரிமை அமைப்புகள் இந்த தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.
அஸ்ஸலாமு அலைகும் இதில் கொள்ளை அடித்தற்காக மரண தண்டனை என்று கூறப்பட்டது தவறு இவர்கள் பல நகைக் கடைகளை ஆயுத முனையில் பயம் காட்டி கொள்ளையிட்டுள்ளார்கள் இதற்கு இஸ்லாமியக் குற்றவியலில் ஹிராபா என்பார்கள் அதாவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமைபவர்கள் இவர்கள் இந்த விடயத்தில் தாம் தவ்பா செய்ததாக கூறி இதை மீள்பரிசீலனை செய்யுமாறு கோறியுள்ளார்கள்
ReplyDelete