Header Ads



சென்னை மகாபோதியிலிருந்து 63 இலங்கை பிக்குகள் வெளியேறினர்


பௌத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் தமிழ்நாட்டில் எழுந்துள்ள சிறிலங்கா எதிர்ப்புணர்வை அடுத்து, நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புகள் உள்ளதால், சென்னை எழும்பூரில் உள்ள மகபோதி நிலையத்தில் தங்கியிருந்த அனைத்து பௌத்த பிக்குகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 

மகாபோதி நிலையத்தில் தங்கிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சுமார் 63 பேர் நேற்றிரவு தொடரூந்து மூலம், காவல்துறை பாதுகாப்புடன் வடமாநிலங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.