சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு 60 வயதில் ஓய்வு
(Tn) சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு 60 வயதில் ஓய்வு வழங்க அந்நாட்டு தொழில் துறை அமைச்சு புதிய சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 60 வயது கடந்தும் அங்கு தொடர்ந்தும் பணி புரிந்துவரும் வெளிநாட்டினரை விடுவிக்க சவூதி அரசு திட்டமிட்டிருப்பதாக அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் புதிய சட்டத்தை அமைக்க சவூதி வர்த்தக மற்றும் தொழில் துறை குழாம் ஆலேசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. சவூதியில் தனியார் துறைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 5 இலட்சம் வெளிநாட்டினர் பணி புரிவதாக அந்நாட்டின் மனித வள குழுவின் துணைத் தலைவர் அமல் ஷிரா குறிப்பிட்டார். அத்துடன் புதிய சட்ட திருத்தத்தில் 55 வயதுக்குக் கூடிய வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்யவும் பரிந்துரைக்கப்படவுள்ளதாக அமல் ஷிரா குறிப்பிட்டார்.
இதன்போது வெளிநாட்டினர் சவூதியில் பணிபுரியும் காலம் அதிகபட்சமாக 25 ஆண்டுகளுக்கு வரையறுக்கவும் வயது முதிர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் தமது அனுபவத்தை சவூதி நாட்டவர்களுக்கு கடத்துவது தொடர்பிலும் புதிய சட்டத்தில் பரிந்துரைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Post a Comment