Header Ads



மலையக முஸ்லிம் மாநாட்டின் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு


மலையக முஸ்லிம் மாநாட்டின் (u.c.m.c.) மூலம் 2013  தரம் ஐந்து புலமை பரீட்சை   மாணவர்களுக்கான செயட்பாட்டுமுறை  கருத்தரங்கொன்றை  ப/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தரங்கில் பதுளை , பசறை, லுணுகலை,பண்டரவலை,தியத்தலாவை, கல உட  ஆகிய பிரதேசங்களின் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர் . முற்றிலும் வித்தியாசமான பல அணுகுமுறைகளுடன் செயற்பாட்டு முறையிலான இக்கருத்தரங்கில் ப / பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பத்துபேரும், கல உட பிரபல புலமைபரீட்சை ஆசிரியர் எம் ஹுசைன் அவர்களும் வளவாளர்களாக பங்குபற்றினர் . ப /  பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் எம் ஏ ஹைருன் நிஸா வரவேற்புரையை அடுத்து ,  பதுளை கோட்ட  கல்வி காரியாலய பணிப்பாளர் திரு ஜெயதிலக அவர்கள் இக்கருத்தரங்கை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் .          



No comments

Powered by Blogger.