மழை பெய்யாதிருக்க 4 மில்லியன் டாலர் செலவில் திட்டம்
ரஷ்யா பொதுவாக குளிர் மிகுந்த நாடு ஆகும். அங்கு மழை பெய்யும் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பதிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மே 9-ம் தேதி வெற்றி நாளாகவும், ஜூன் 12-ம்தேதி ரஷ்ய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாட்களில் மக்கள் அதிக அளவில் பொது இடங்களில் கூடுவார்கள். பெரிய அளவிலான அணி வகுப்புகளும் நடைபெறும். இந்த நாட்களில் மழை பொழிந்தால் இந்த விழாக்களை நடத்துவதில் சிரமம் ஏற்படும். எனவே மழையால் ஏற்படும் சிரமத்தை தடுக்க, ரஷ்ய அரசு புதிய வழியை கண்டுபிடித்து, அரசு வலைத்தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், நகரத்தின் வானிலையை பாதுகாக்கும் பணிக்கு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பத்தை கோரியுள்ளது. இதற்கு அரசு 4 மில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. இதன்படி மேகங்களில் சில்வர் ஆக்சைடு அல்லது திட நிலையில் உள்ள கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) தூவப்படும். இதனால் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மேகங்கள் நீராவியாக மாறிவிடும்.
இந்த முறையை ரஷ்யா பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியது. ஆனால், இது போன்ற செயல்பாடுகள், பிற்காலத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவை குறைத்து விடும் என்று குற்றம் சாட்டிளயுள்ளனர்.
Post a Comment