Header Ads



'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியில் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு 4 காட்சிக்கூடங்கள்

(ஏ.எல்.நிப்றாஸ்)

'தெயட்ட கிருள' (தேசத்திற்கு மகுடம்) தேசிய அபிவிருத்திக் கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை முதல் 29ஆம் திகதி வரை அம்பாறையில் இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியில் சுமார் 1000 நிறுவனங்களின் உற்பத்திகள், சேவைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன் 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட வருகைதருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில் இலங்கையில் தொழில் பயிற்சிகளை வழங்கும் மிகப் பெரிய வலையமைப்பைக் கொண்டியங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 4 காட்சிக் கூடங்கள் ஹாடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதிகார சபை தலைவர் கேர்ணல் பிரியதர்சன ரட்ணாயக்கவின் பணிப்புரைக்கமைய தேவையான அனைத்து ஏற்பாடுகளும்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழிற்பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் அழகுக் கலை, இலத்திரனியல் தொழில்நுட்பம், பேக்கரி தொழில்நுட்பம், வெல்டிங் (ஒட்டுவேலை) தொழில்நுட்பம் போன்ற பயிற்சி நெறிகளுக்கான காட்சிக்கூடங்களே ஹாடி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இக்கண்காட்சிக் கூடங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட துறையில் புத்தாக்க முறையில் வடிவமைப்புச் செய்யப்பட்ட உற்பத்திகள் காண்பிக்கப்படுவதுடன் தொ.ப.அதிகார சபையினால் இந்நாட்டு இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட்டு வருகின்ற சேவைகள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்படும். 

இப்பணிகiளை கண்காணிக்க அதிகார சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் அம்பாறைக்கு வருகை தந்துள்ளனர். காட்சிக் கூடங்களை அமைக்கும் பணிகளை அம்பாறை மாவட்டத்தில் பணிபுரியும் துறைசார் போதனாசிரியர்கள் மேற்கொள்வதுடன், பயிலுனர் மாணவர்களும் உதவிகளை வழங்கி வருகின்றனர். இதற்கென சுமார் 1 மில்லியன் ரூபாவை அதிகார சபை ஒதுக்கீடு செய்துள்ளது. 


No comments

Powered by Blogger.