Header Ads



பாகிஸ்தானில் தாக்குதல் - 48 பேர் மரணம், 140 பேர் காயம்



பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் நேற்று நிகழ்ந்த பயங்கர குண்டு வீச்சு தாக்குதலில் 48 பேர் பலியாகினர். 140க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் வசிக்கும் ஷியா பிரிவினரை குறிவைத்து சமீப காலமாக  தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஷியா பிரிவினர் மீது அவ்வப்போது போராளிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். 

 கராச்சியில் ஷியா மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதியில் 03-03-2013 நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 48 பேர் உடல் சிதறி பலியாகினர். 140க்கும் மேற்பட்ட படுகாயமடைந்தோர் கராச்சி நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று மாலை 7 மணியளவில் கராச்சி நகரில் உள்ள அப்பாஸ் டவுன் பகுதியில் ஷியா பிரிவினர் தொழுகை நடத்திய மசூதி அருகே இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றது. சுமார் 150 கிலோ வெடி மருந்துகள் மற்றும் 'பால் பேரிங்' கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த குண்டு வெடித்த ஓசை 10 கி.மீட்டர் தூரம் வரை எதிரொலித்தது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் உள்ள இக்ரா டவர்ஸ், ராபியா பிளவர் சிட்டி ஆகிய அடுக்குமாடி கட்டிடங்களின் இரண்டு மாடி பகுதிகள் இடிந்து விழுந்தன. பல கடைகள் மற்றும் கார்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. 


1 comment:

  1. please brothers stop and avoid clashes between Sunny and Shiya Muslims. We can not make bombs against human'and no rights to kill any one.

    ReplyDelete

Powered by Blogger.