பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல் - 42 பேர் மரணம், 84 பேர் காயம் (வீடியோ)
டமாகஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்று குண்டுவெடிப்பு சம்பவத்தில், சிரியாவின் ஜனாதிபதிக்கு ஆதரவான முஸ்லிம் மத குரு ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மொத்தமாக 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி பசார் அல் அசாட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற எதிர்கட்சி போராளிகளால் இந்த குண்டுத்தாக்குலை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் சிரியாவின் முக்கிய மத குரு ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்னொரு மார்க்க அறிஞரையும் இழந்து விட்டோம்.
ReplyDelete.......................................................................................
நேற்று (21-03-2013) மாலை டமஸ்கஸின் அல்-ஈமான் மஸ்ஜிதில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இன்றை இஸ்லாமிய உலகின் மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவரென கருதப்படும் அஷ்ஷெய்க் சயீத் ரமழான் அல்-பூத்தீ (ரஹ்) அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது தமது 84வது வயதில் ஷஹீதாக்கப்பட்டுள்ளார்கள். إنا لله وإنا اليه راجعون.
இந்த தற்கொலைத்தாக்குதலில்42 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 84 பேர் காயமடைந்துள்ளதாகவும் இணையத்தளமொன்றில் வெளியான செய்தி கூறுகிறது.
ஷெய்க் அவர்கள் கொல்லப்பட்டது இஸ்லாமிய உலகில் ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை கொடுப்பானாக. ஆமீன்.
தகவல்: http://sana.sy/ara/336/2013/03/21/473841.htm
ஷெய்க் அவர்களைப் பறிய மேலிதிக விபரங்களை அறிந்து கொள்ள: http://ar.wikipedia.org/wiki/محمد_البوطي
இன்று டமஸ்கஸின் அல்-ஈமான் மஸ்ஜிதில் நடைபெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் இன்றை இஸ்லாமிய உலகின் மிகப்பெரும் அறிஞரெனக் கருதப்படும் ஷெய்க், அல்லாமா, முஜத்தித், கலாநிதி சயீத் ரமழான் அல்-பூத்தீ (ரஹ்) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளார்கள். إنا لله وإنا اليه راجعون.
ReplyDeleteஇந்த தற்கொலைத்தாக்குதலில் ஷெய்க் அவர்களில் பேரன் உட்பட 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆசிய மக்களுக்கு பெருமளவில் தெரிந்திருக்காவிடினும் அரேபிய உலகில் ஷெய்க் அவர்களை தெரியாதவர்களே இருக்கமுடியாது எனும் அளவுக்கு பிரபலமானவர். இன்றைய இஸ்லாமிய உலகின் பெரும் அறிஞர்களாக இருக்ககூடிய பெருமளவிலானவர்கள் ஷெய்க் அவர்களின் மாணவர்கள் என்பதொன்றே ஷெய்க் அவர்களின் இஸ்லாத்துக்கான பங்களிப்பை உணர்த்தக்கூடிய விடயம். அகீதா, ஃபிக்ஹ், சீறா போன்ற துறைகளில் ஷெய்கவர்கள் எழுதிய அல்-ஜிஹாத் ஃபில் இஸ்லாம், ஃபிக்ஹுஸ் ஸீரா, அல்-லாமத்ஹபிய்யா போன்ற பல நூல்கள் ஒப்பற்றவை. தனது 84ஆவது வயதில் தினமும் மஸ்ஜிதில் நடாத்தும் தர்ஸில் வைத்து ஷெய்க் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதே தர்ஸில் ஆண்களும் பெண்களும், செருப்புத்தைக்கும் தொழிலாளி , டாக்ஸி ட்ரைவர் தொடக்கம் ஆலிம்களும் அறிஞர்களும் வெளி நாட்டு மாணவர்களும் நூற்றுக்கணக்கில் தினமும் முண்டியடித்துக்கொண்டு கலந்து கொண்டதை கண்டதாக ஷெய்கா ஷாஸியா கூறுகிறார்.
மரியாதை நிமித்தம் தமது கைகளை மக்கள் முத்தமிடுவதையும் ஷெய்க் அவர்கள் தடுத்து வந்தார்கள். ஒரு முறை இதற்கான காரணத்தை கேட்டபோது ஷெய்கவர்கள் கண்களில் கண்ணீர் மல்க கூறினார்கள்:
எவனொருவனைத்தவிர வேறு கடவுள் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, மக்கள் எனது கையை முத்தமிட வரும்போது நான் வெட்கப்படுகிறேன்.ஏனென்றால் நான் என்னை அறிந்தவனாக இருக்கிறேன். தனது அடிமைகளின் குற்றங்களையும் குறைகளையும் மறைப்பவனே அல்லாஹ்.அவன் அதிகம் மறைப்பவனாக இருக்கிறான்... அதிகம் மறைப்பவனாக இருக்கிறான்.. எனக்கு என்னுடைய குறைகளைத் தெரியும் எனது ரப்புடனான தொடர்பில் நான் எவ்வளவு பின் தங்கியுள்ளேன் எனவும் எனக்குத் தெரியும். இருந்தாலும் எனது ரப்பு மக்கள் என்னுடைய நல்லதை மாத்திரம் காணுமாறு செய்துள்ளான். எனது குறைகளை எனக்கும் அவனுக்கும் இடையில் வைத்துள்ளான். ஒரு சாதரண மனிதன், என்னுடைய புற நடத்தையைப் பார்த்து என்னுடைய கையை முத்தமிட வருகிறான். அவனுக்கு என்னுடைய உள்ளத்தை தெரியாது. அல்லாஹ்வுக்குமா தெரியாது..?! எனக் கூறினார். ஸுப்ஹானல்லாஹ்..!
இத்தனை தகுதிகளையும் அறிஞர்களின் மரியாதையையும் பெற்ற ஷெய்கவர்களின் பணிவு இன்றைய உலமாக்கள் அனைவருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஷெய்க் அவர்கள் கொல்லப்பட்டது இஸ்லாமிய உலகில் ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அவர்கள் எழுத்துக்கள் மூலமும் அவர்களின் மாணவர்கள் மூலமும் இந்த உலகம் பயன் பெற அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அருள் பாலிப்பானாக. ஷெய்கவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை கொடுப்பானாக. ஆமீன்.