எகிப்தில் வன்முறை - 40 க்கும் மேற்பட்டவர்கள் காயம்
எகிப்து நாட்டில், அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில், 40 பேர் காயமடைந்தனர். எகிப்து அதிபர், முகமது முர்சி. முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் உருவாக்கிய சட்டங்களில் மாற்றம் செய்து, இஸ்லாமிய சட்டங்களாக மாற்றி வருகிறார். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆளும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் அடிக்கடி மோதல்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், இரு இடங்களில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அலுவலகங்கள் மீது, கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. மோதலை தடுக்க, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். போலீசாரை நோக்கி, போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Post a Comment