பாகிஸ்தானில் கலவரம் - 40 பேர் மரணம்
பாகிஸ்தானின் கைபர் ஏஜென்சி பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அவர்கள் தனியாக சட்டதிட்டங்கள் உருவாக்கி தனி ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திராபள்ளத்தாக்கில் 2 பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
பின்னர் அது கலவரமாக மாறியது. இச்சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதற்கிடையே, பெஷாவரின் புறநகரில் உள்ள மட்டானி என்ற இடத்தில் சி.டி. கடைகள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
அதில் பல இடங்கள் இடிந்து தரை மட்டமாயின. அப்பகுதியில் துண்டு பிரசுரங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அதில் இஸ்லாம் சட்டத்துக்கு எதிராக இங்கு விற்பனை நடக்கிறது. தொடர்ந்து இதுபோன்று நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
Post a Comment