மனிதர்களின் தவறான செயல்பாடு - 4000 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை
உலகின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. குறைந்த பட்சம் 4000 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனித இனத்தின் தவறான செயல்பாடுகளால் வெப்பநிலையில் இந்த மற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவரை நவீன புவியியல் யுகத்தில் நாம் கண்டிராத அளவு அதிக வெப்பத்தை நாம் உணர்வோம்.
நவீன புவியியல் யுகத்தின் ஒரு பகுதி 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த காலத்தில் தான் அதிக வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்த சூரிய ஒளியின் அளவில் மாற்றம் ஏற்பட்டது. வட துருவங்களில் பனிக்கட்டிகளின் உருகும் அளவு அதிகரித்துள்ளது. 8000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனித நாகரிகம் உருவானது. அதன் பின்னர் தொடர்ந்து வளர்ச்சி அடைந்த மனித நாகரிகம் இந்த வெப்பநிலை மாற்றத்துக்கு காரணமாக இருக்கிறது.
இவ்வாறு ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
Post a Comment