Header Ads



உலகின் முக்கிய பணக்காரர் மன்னர் அப்துல்லா - சவூதியில் 40 வீதமானவருக்கு வீடு இல்லை



சவூதி அரேபியாவில் 60 வீதமானோருக்கு போதிய கூடிய வீடுகள் இல்லை என செய்தி வெளியாகியுள்ளது. சவூதியின் அல் வதான் பத்திரிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில், எண்ணெய் வளம் கொண்ட சவூதியில் தமது பிரஜைகளுக்கு முறையான வீட்டு வசதிகளை அமைத்துக் கொடுப்பதில் அந்நாட்டு அரசு கடும் சவாலை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்படி செய்தியில் சவூதியில் 40 வீதமானோர் வீடு இன்றி வாடகை வீட்டில் போதிய வசதி இன்றி வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, 20 வீதமானோருக்கு சொந்த வீடு இருந்தாலும் வறுமையில் வாழ்த்து வருகின்றனர். சிக்கலான வங்கி விதிகள், நிலங்களின் விலை அதிகரிப்பு போன்ற சிக்கல்களால் சவூதியில் கடந்த ஒரு சில ஆண்டுகளில் வீட்டுப் பிரச்சினை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் காடியன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் சவூதி அரேபியாவில் 26 மில்லியனுக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டில் வாழ்வதாக செய்தி வெளியிட்டிருந்தது. 

சவூதியின் வருவாய் குறிப்பிட்ட வர்க்கத்திடம் சூழல்வதாகவும் இதனால் அங்கு ஊழலும் அதிகரித்து வருவதாகவும் மேற்படி பிரிட்டனின் நாளாந்த பத்திரிகை செய்து வெளியிட்டது.

போபஸ் இதழின் கணக்கெடுப்புப் படி சவூதி மன்னரின் சொத்து பெறுமதி 18 பில்லி யன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்லாந்து மற்றும் புரூணய் அரச பரம்பரைக்கு அடுத்து உலகில் பணக்கார மன்னராக அப்துல்லாஹ் பதிவாகியுள்ளார். அத்துடன் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகவும் சவூதி உள்ளது. thinaharn

1 comment:

  1. இது முற்றிலும் பொய் அரசில் எந்த தப்பும் இல்லை இது சவுதியில் வாழும் மக்களின் தப்பு சரியாக தொழிலுக்கு செல்வதில்லை அடிப்படை பிரட்சினை இதுதான் எத்தனையோ இளைஞர்கள் தாய் தகப்பனுடைய பணத்தில் வாழ்கிறார்கள் இதுதான் காரணம் சவுதி அரசு தாராளமாக தொழில் கொடுக்க தயாராக உள்ளது அனால் அம்மக்கள் தயார் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.