ஜேர்மனியில் ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்திய 3 அமைப்புக்களுக்கு தடை
(Tn) ஜனநாயக எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்தக் கோருவதாகவும் குற்றம் சாட்டி ஜெர்மனியின் மூன்று இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஹ்வா எப்.எப்.எம்., இஸ்லாமிக் ஓடியோஸ் மற்றும் அந்நுஸ்ரா ஆகிய அமைப்புகளுக்கே தடை விதிக்கப்பட் டுள்ளன. இந்த மூன்று அமைப்புகளும் சலபி கொள்கையை கொண்டதாகும். இந்த தடையை அடுத்து ஜெர்மனி பொலிஸார் புதன்கிழமை இந்த அமைப்புகளுக்கு எதிரான சுற்றிவளைப்புகளை மேற்கொண்டது. எனினும் இதன்போது எவரும் கைது செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. “தடை செய்யப்பட்ட இந்த அமைப்புகளின் பின்னணியில் சலபிஸம் செயற்படுகிறது. இவைகள் எமது சமூக ஒழுங்கில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை தோற்றுவிக்கிறது. இதனால் ஜனநாயகத்திற்கு பதில் சலபி முறையும் அரசியல் அமைப்புக்கு பதில் ஷரிஆவும் தோற்றுவிக்கப்படும்” என்று ஜெர்மனி உள்துறை அமைச்சர் ஹாஸ் டீட்டர் எச்சரித்துள்ளது.
ஜெர்மனியில் அல் குர்ஆனை கற்பிக்கும் பிரசாரத்தை சலபிக்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு சலபி முஸ்லிம்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுமார் நான்கு மில்லியன் முஸ்லிம்கள் வாழும் ஜெர்மனியில் 4000க்கும் அதிகமான சலபி சிந்தனை கொண்டவர்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.
Post a Comment