மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற 3 மாணவர்களும், ஆசிரியரும் கடலில் மூழ்கி பலி
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்த பாடசாலை மாணவர்கள் மூவரும் ஒரு ஆசிரியரும் அடங்கலாக நான்கு பேர் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரக் கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.
இச்சம்வம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட நாவலடி வாவியையும் கடலையும் இணைக்கும் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
பதுளை சரஸ்வதி கணிஸ்ட வித்தியாலய ஆசிரியர் கந்தசாமி பிரதாபன் வயது 40 நாற்பது,ஹாலிஎல ஊவா விஞ்ஞான கல்லூரியில் 2012ஆம் ஆண்டு க.பொ.த. சாதாண பரீட்சை எழுதிவிட்டு ஏப்ரல் 10ஆம் திகதி வெளிவரவுள்ள பெறுபெறுகளை ஏதிர்பார்த்த வண்ணம் காணப்பட்ட மாணவர்களான கணகசபை நிதர்சன் வயது 17,போல்ராஜ் சாந்தன் வயது 17,பாலசுப்ரமணியம் அபிசாந்த வயது 17, ஆகியோரே நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.
இவர்களில் மாணவன் வயது 17கணகசபை நிதர்சனை தவிர ஏனைய முவரின் சடலங்கள் கடற்படையினராலும் அப்பகுதி மீனவர்களினாலும் தேடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக 9 பேர் கடலில் நீராடியுள்ளதுடன் இவர்களில் நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.
Post a Comment